மீண்டும் தமிழக மீனவர்களைக் கடத்திய ஆந்திர மீனவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை ராயபுரம், காசிமேடு பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்களை ஆந்திர மீனவர்கள் கடத்திச் சென்று விட்டனர்.இவர்களை மீட்க மீனவ சங்க பிரதிநிதிகள் ஆந்திரா விரைந்துள்ளனர்.

சென்னை ராயபுரம் மற்றும் காமேடு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது இவர்கள் ஆந்திரஎல்லைக்குள் சென்று விட்டால் இவர்களை ஆந்திர மீனவர்கள் கடத்திச் சென்றுவிடுவர்.

இவர்களிடமிருந்த மீன்களையும் பறித்துக் கொண்டு, இவர்களை விடுவிக்க பணமும் கேட்பார்கள் ஆந்திரமீனவர்கள். இது அடிக்கடி நடக்கும் சம்பவம்.

கடந்த வியாழக்கிழமை ராயபுரம் மற்றும் காசிமேடு பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்கள் 3 விசைப் படகுகளில்கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் வழி தவறி ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதிக்குள் சென்று விட்டனர்.இவர்கள் அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆந்திரமீனவர்கள் இவர்களை கடத்திச் சென்று விட்டனர்.

கடத்திச் செல்லப்பட்ட மீனவர்களில் மேகநாதன் என்பவர் தப்பிவிட்டார். இவர் காசிமேட்டிலுள்ள தன் உறவினர்வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கடத்தல் சம்பவம் குறித்து தகவல் கொடுத்தார்.

இந்த தகவலையடுத்து கடத்தப்பட்ட மீனவர்களை மீட்பதற்காக மீனவர் சங்க பிரதிநிதிகள் ஆந்திரா சென்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+