தடாவைவிடக் கடுமையானது: கொளத்தூர் மணி
பெங்களூர்:
மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள பொடோ சட்டம் தடா சட்டத்தைவிடகடுமையானது என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணிகூறியுள்ளார்.
கடத்தல் மன்னன் வீரப்பனிடமிருந்து கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பதில் முக்கியப்பங்கு வகித்தவர் கொளத்தூர் மணி. நெடுமாறனுடன் சேர்ந்து வீரப்பனிடம் பேசிராஜ்குமாரை மீட்டவர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் 123வது பிறந்தநாள் விழாபெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.
நிகழ்ச்சி முடிந்த பின் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
தடாவையே புதிதாக பொடோ என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இது தடாவை விட கடுமையானது. அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்காக இந்த சட்டம்கொண்டு வரப்பட்டுள்ளது. ஏனென்றால் தீவிரவாதிகளை ஓடுக்க ஏற்கனவே பலசட்டங்கள் உள்ளன.
மனித உரிமைகளை மீறி பொடோ சட்டத்தை கொண்டுவந்துள்ளது ஜனநாயகத்திற்குஎதிரானது.
இந்தச் சட்டத்தின்படி வீரப்பனை தெரியும் என்றாலும் ஏன் சொல்லவில்லை என்றுகைது செய்வார்கள்.
இந்த சட்டதின்படி போலீசார் அறிக்கை கொடுத்தாலே போதும்.
மேலும் வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்தாலும் அதுவும் பயங்கரவாதமாககருத்தப்படும்.
இந்த பொடோ சட்டத்தை எதிர்த்து விரைவில் நாடு முழுவதும் பிரச்சாரம்செய்யவுள்ளோம்.
ராஜ்குமார் மீட்டு வரப்பட்ட பின் நான் வீரப்பனை சந்திக்கவில்லை. வீரப்பன்சரணடைய தயாராக இருக்கிறாரா என்பதும் எனக்கு தெரியாது. அரசு விரும்பி, அரசுதூதராக சென்று பேசவேண்டும் என்று கூறினால் காட்டுக்கு செல்ல நான் தயாராகஇருக்கிறேன் என்றார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications