மதானி ஆதரவாளர்கள் சாலை மறியல்... தமிழக-கேரள எல்லையில் போலீஸ் குவிப்பு
கோயம்புத்தூர்:
கோவை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்பாக கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்துல் நாசர்மதானியை விடுதலை செய்யக் கோரி அவரது ஆதரவாளர்கள் கேரள-தமிழக எல்லையில் சாலை மறியிலில் இன்று(திங்கள்கிழமை) ஈடுபடுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
1998ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான கேரளா மக்கள்ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி அவரது ஆதரவாளர்கள் போராடி வருகிறார்கள். இந்நிலையில்மதானியை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி மதானியின் ஆதரவாளர்கள் கோவை அருகே.கேரள-தமிழக எல்லையில் சாலை மறியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து தமிழக-கேரள எல்லையில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை)கேரளா செல்லும் பேருந்துகள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன.
கேரளா செல்லும் வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டதால் அவர்கள் தமிழக-கேரள எல்லை நகரானபாலக்காட்டில் சாலை மறியலில் ஈடுபடப்போவதாக கூறினர்.
எந்த விதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளர். தண்ணீர் பீய்ச்சிஅடிக்கும் வாகனங்களுடனும், நவீன ஆயுதங்களுடனும் போலீசார் தயாராக உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications