பாகிஸ்தான் விமானத் தளத்தைக் கைப்பற்றிய ஆதிவாசிகள்
இஸ்லாமாபாத்:
தலிபான்களுக்கு ஆதரவான ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ஆதிவாசிகள் சிலாஸ் நகரின் விமானத் தளத்தைக்கைப்பற்றியுள்ளனர். மேலும் அந் நகரின் சிறைச்சாலையயும் உடைத்து 36 கைதிகளையும் அவர்கள் விடுவித்தனர்.
நகரின் முக்கிய கட்டடங்களையும் அவர்கள் கைப்பற்றினர்.
சீன நெடுஞ்சாலை அடைப்பு:
4 நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான்-சீனாவை இணைக்கும் சில்க் ரூட் எனப்படும் காரகோரம் நெடுஞ்சாலையைவேறொரு ஆதிவாசிப் படை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது. அதில் போக்குவரத்தை முற்றிலும்நிறுத்திவிட்டனர்.
சீனாவிலிருந்து இந்தச் சாலை வழியாகத் தான் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்ப்படுகின்றன.ராணுவரீதியில் மிக முக்கியமான சாலை இது.
இந்தச் சாலையில் 4 இடங்களில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தடுப்புகளில் கண்ணி வெடிகளையும்புதைத்துள்ளனர்.
இந்த ஆதிவாசிகள் தலிபான்களுடன் சேர்ந்து போராடுவதற்காக ஆப்கானிஸ்தானை நோக்கிச் சென்றுவருகின்றனர். அமெரிக்கத் தரைப்படை உள்ளே வந்தவுடன் நீங்கள் அவர்களை சுற்றி வளைக்க உதவுங்கள்,அதுவரை ஆப்கானிஸ்தானுக்குள் வர வேண்டாம் என தலிபான்களும் அவர்களிடம் கூறியுள்ளனர்.
நகரம் முழுவதும் ஆதிவாசிகள்:
இதனால் ஆப்கானிஸ்தானுக்குள் நுழையாமல் எல்லையில் குவிந்து வரும் இந்த ஆதிவாசிக் கும்பல் எல்லைப்பகுதியில் உள்ள நகரையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.
அவர்களிடம் இருந்து நகரைத் திரும்பப் பெற ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அங்குவிரைந்துள்ளனர்.
ஆனால், கையில் கோடாலிகள், வாள்கள், நாட்டுத் துப்பாக்கிகள், ஏ.கே.-47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன்இந்த முரட்டு ஆதிவாசிகளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் ராணுவத்தினர் முழித்துக் கொண்டுள்ளனர்.
சுத்தமாக எழுத்தறிவே இல்லாத இந்த ஆதிவாசிகள் மத வெறி பிடித்தவர்கள். தலிபான்களின் மிகத் தீவிரமானஆதரவாளர்கள். இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினால் பாகிஸ்தான் முழுவதும் கலவரம் வெடிக்கும் அபாயம்உள்ளது.
பேச்சுவார்த்தையில் ராணுவம்:
ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள நகரை இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீட்கும் முயற்சிகளில்ராணுவம் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்களையும், இதற்கு பாகிஸ்தான் உதவி வருவதையும்இவர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
இவர்கள் கைப்பற்றியுள்ள சிலாஸ் விமானத் தளம் மிக முக்கியமானது. ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தஇந்த விமானத் தளத்தையும் அமெரிக்கா பயன்படுத்த இருந்தது. இந்த விமானத் தளத்தைச் சுற்றி தடைகளையும்எழுப்பியுள்ள இவர்கள், போலீசையோ ராணுவத்தினரையோ அங்கு வரக் கூட அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.
இந் நிலையில் பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதத் அப்துல் சயீப் கூறுகையில்,
எங்களுடன் சேர்ந்து போரிட வரும் யாரையும் நாங்கள் தடுக்க மாட்டோம். இந்த ஆதிவாசிப் படையினருக்குநன்றி தெரிவிக்கிறோம். இதே போல உலக நாடுகளில் உள்ள முஸ்லீம்களும் விரைவில் கிளர்ந்தெழுவார்கள்என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications