மதானி விடுதலை கோரி சாலை மறியல்: தமிழக-கேரள எல்லையில் லாரி-பஸ்கள் உடைப்பு
பாலக்காடு:
கோயம்புத்தூர் சிறையில் இருக்கும் மதானியை விடுதலை செய்யக் கோரி தமிழக-கேரள எல்லையில் நடந்தசாலை மறியல் போராட்டம் வன்முறையாக வெடித்தது. லாரிகளும் பஸ்களும் உடைக்கப்பட்டன.
நேற்று (திங்கள்கிழமை) காலையிலேயே வாளையாறு சந்திராபுரம் வணிக சாவடி முன் மதானியின் ஆதரவாளர்கள்பெருமளவில் குவிய ஆரம்பித்தனர். இந்தப் பகுதி முழுவதும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்தே ஏராளமானபோலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
அப்பகுதியில் போக்குவரத்தும் திருப்பிவிடப்பட்டது. இதையறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மாற்றுப் பாதையில்செல்லும் வாகனங்களை மறிப்பதற்காக பாலக்காடு அருகே உள்ள கூட்டுப் பாதை சந்திப்புக்குச் சென்றனர்.
அங்கேயே அமர்ந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சாலைப் போக்குவரத்துமுழுவதுமாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பதட்டமான சூழ்நிலையும் அங்கு உருவானது.
"மதானியை விடுதலை செய்யாவிட்டால் சாகும் வரை போராடுவோம்" என்பது போன்ற கோஷங்களைஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பினர்.
பிற்பகல் 3 மணி வரை இந்த சாலை மறியல் போராட்டம் நடந்தது. பாலக்காடு அருகே ஒரு தனியார் பஸ்சின்கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள ஆரியங்காவிலும் மறியல் போராட்டம் நடந்தது. மேலும்தூத்துக்குடியில் இருந்து எர்ணாகுளம் சென்று கொண்டிருந்த அரசு பஸ், உருக்குன்னூர் அருகேஆர்ப்பாட்டக்காரர்களால் கல் வீசித் தாக்கப்பட்டது.
இவை தவிர, தமிழகத்திலிருந்து ஆரியங்காவு வழியாக கேரளாவுக்குச் சென்று கொண்டிருந்த 51 லாரிகளின்கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. கேரளத்தின் கொல்லம் மாவட்டம் சாமக்கடாவில் தமிழகத்திலிருந்து சென்ற 2லாரிகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
மதுரையிலிருந்து சென்ற ஒரு பயணிகள் ரயிலும் பாலக்காடு அருகே ஆர்ப்பாட்டக்காரர்களால் தடுத்துநிறுத்தப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை அப்புறப்படுத்திய பிறகு, அந்த ரயில் புறப்பட்டுச்சென்றது.
இந்தப் போராட்டம் குறித்து மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயல் தலைவர் அப்துல்லா கூறியதாவது:
தலைவர் மதானியை விடுதலை செய்யாவிட்டால் இப்போராட்டம் நிச்சயம் தொடரும். சென்னை, டெல்லியிலும்போராட்டம் நடத்துவோம்.
அடுத்து வரும் போராட்டங்கள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றார் அப்துல்லா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications