இந்தியா மீது பாகிஸ்தான் ஷெல் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய ஷெல் தாக்குதலில்காஷ்மீர் பொதுமக்களில் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
ராக்கெட்டுகள், மோர்ட்டார் ரக பீரங்கிகள் ஆகியவற்றையும் பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்தியதாகக்கூறப்படுகிறது.
நேற்று (திங்கள்கிழமை) இரவு முழுவதும் கூப்வாரா மாவட்டத்தின் கர்ணா பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முகம்மது மக்பூல் என்பவருடைய வீட்டினருகே விழுந்த ஷெல் வெடித்து அவர் காயமடைந்தார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இருக்கும் பாதுகாப்புப் படையினரும் பாகிஸ்தான் ராணுவத்தினரைநோக்கி பதில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஆனால் சேத விவரம் பற்றி எதுவும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications