கர்நாடகம் நீர் தர மறுத்ததால் விவசாய உற்பத்தி பாதிப்பு
கோயம்புத்தூர்:
காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்து விட்டதால் இந்த ஆண்டு தமிழக விவசாய விளைபொருள்உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று காவிரி கண்காணிப்புக் குழுத் தலைவரும் நீர் வளஆலோசகருமான பேராசிரியர் ஏ. மோகனகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மேட்டூர் அணை தண்ணீர் வெகு வேகமாக வற்றிக் கொண்டே வந்ததால், காவிரிபாசன விவசாயிகள் வரலாறு காணாத வருத்தத்திற்கு உள்ளாயினர்.
இதனால் காவிரியிலிருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டால்தான் ஏற்கனவே பயிரிடப்பட்டிருந்தபயிர்களை அறுவடை செய்ய முடியும் என்றும் குறுவை சாகுபடியை நன்றாக செய்ய முடியும் என்றும் விவசாயிகள்நம்பினர்.
விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க தமிழக அரசும் எவ்வளவோ முயன்றது. காவிரி கண்காணிப்புக் குழுக்கூட்டம், காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் என்று பல கூட்டங்களை மத்திய அரசு நடத்தியும் பலன் என்னவோபூஜ்ஜியம்தான்.
கடைசி வரை காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து விட்டது. மத்திய அரசும் இவ்விஷயத்தில்அவ்வளவாக அக்கறை கொள்ளவில்லை. கர்நாடக அரசின் பாரா முகத்தினை மத்திய அரசும் கண்டுகொள்ளாமல்விட்டுவிட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக நல்ல மழை பெய்ததால் குறுவை சாகுபடிப் பயிர்கள் பிழைத்துக்கொண்டன. மேட்டூரில் சொல்லிக் கொள்ளும்படி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், விவசாயிகளும் தற்காலிகமாகமூச்சு விட்டுக் கொண்டனர்.
ஆனாலும், அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பலன் இல்லை என்றுதான் கூற வேண்டும். தமிழகத்தில் இந்த ஆண்டுவழக்கமான விளைச்சலை விட குறைந்த அளவுதான் பயிர்கள் விளைந்துள்ளன.
இதனால் விவசாய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், விளைச்சலும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று காவிரிகண்காணிப்புக் குழுவின் தலைவரே கூறியுள்ளார்.
காவிரி பாசன விவசாயிகள் விரைவில் சம்பா சாகுபடியையும் தொடங்கவுள்ளனர். அதற்குள்ளாகவாவது கர்நாடகஅரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடும் என்றும் அவர் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
காவிரி நீர்ப் பிரச்சனைக்குத் தீர்வு காண பல நல்ல திட்டங்களெல்லாம் உள்ளன என்று கூறும் மோகனகிருஷ்ணன்,எல்லாம் அரசியல்வாதிகளின் கையில்தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications