டான்சி நிலத்தை வாங்கியதில் தவறில்லை- ஜெ.வக்கீல் வாதம்
சென்னை:
சட்டப்படி அரசு சொத்துக்களை வாங்கத் தடை இல்லாவிட்டால், அரசு ஊழியர் அரசு சொத்துக்களை வாங்கலாம்.எனவே டான்சி நிலத்தை ஜெயலலிதா வாங்கியதில் தப்பில்லை என்று டான்சி வழக்கில் ஜெயலலிதாவின் வக்கீல்வாதாடினார்.
டான்சி மற்றும் கொடைக்காணல் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளின் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணைசென்னை உயர்நீதிமன்றத்ாதில் நீதிபதி தினகர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தரப்பில் ஆஜராகி வாதாடிவரும் வேணுகோபால் தனது வாதத்தில்கூறியிருப்பதாவது,
டான்சி நிலத்திற்கு வழிகாட்டி மதிப்பும், சந்தை மதிப்பும் ஒன்றுதான். டான்சி நிலத்தில் உள்ள பிளாக் எண் 4,ஆலந்தூர் கிராமத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் வருகிறது. கடந்த 1990ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்தநிலம் ரூ.1.68 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முத்திரைத் தான் கட்டணமாக ரூ.3 லட்சம்வசூலிக்கப்பட்டுள்ளது.
பிளாக் எண் 4, பிளாக் எண் 5க்கு மிக அருகில் உள்ளது. 90ம் ஆண்டு அந்த நிலம் 1.68 லட்சத்திற்குவிற்கப்பட்டுள்ளது. 92ம் ஆண்டு ஜெயா பப்ளிகேணன்ஸ் ரூ.3லட்சம் கொடுத்துள்ளது. இது அதிகமானது தான்.
மேலும் டான்சி நிலத்தை விற்பது தொடர்பாக கடந்த 91ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி முடிசெய்யப்பட்டது. அதற்கு 2மாதங்கள் கழித்துத்தான் ஜெயலலிதா முதல்வரானார்.
இந்தியத் தண்டனைச் சட்டம் 169ன் படி அரசு ஊழியர் குறிப்பிட்ட அரசு சொத்துக்களை வாங்கக் கூடாது என்றுதான் கூறப்பட்டுள்ளது. சட்டப்படி அரசு சொத்துக்களை வாங்கத் தடை இல்லை என்றால், அரசு சொத்துக்களைவாங்கலாம்.
இவ்வாறு வக்கீல் வேணுகோபால் வாதாடினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications