மீண்டும் காங்கிரசுக்கு வந்த பாண்டிச்சேரி ராமதாஸ்
சென்னை:
தமிழகத்தில் ராமதாஸ் மாதிரி பாண்டிச்சேரியில் ப.கண்ணன்.
காங்கிரசிலிருந்து விலகி த.மா.காவுக்குப் போய், பின்னர் பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சி ஆரம்பித்துமீண்டும் காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த கண்ணன் இப்போது ஒரேயடியாய் மீண்டும் காங்கிரஸ் கட்சிலேயேஇணைந்துவிட்டார்.
பாண்டிச்சேரி அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உள்ள ப.கண்ணன்.
கடந்த1996ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸில் சேர்ந்தார். பின்னர் மூப்பனாருடன் ஏற்பட்டகருத்து வேறுபாடு காரணமாக கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக தமாகாவிலிருந்து விலகினார். பாண்டிச்சேரி மக்கள்காங்கிரஸ் என்ற கட்சியைத் துவக்கினார்.
சட்டசபைத் தேர்தலை திமுகவுடன் சேர்ந்து சந்தித்தார் கண்ணன். சமீபத்தில் திமுக கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸுக்குஆதரவு அளித்தார். அவரது ஆதரவு பெற்ற ரங்கசாமி முதல்வர் பதவிக்கு வந்துள்ளார்.
இந் நிலையில் தனது கட்சியை கலைத்து விடப் போவதாகவும், தாய்க் கட்சியான காங்கிரஸில் இணையப் போவதாகவும் அவர்அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கடந்த வாரம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத்தைச் சந்தித்துப் பேசினோம். உடனடியாககாங்கிரஸ் கட்சியுடன், பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் இணைகிறது.
தேச நலன் மற்றும் பாண்டிச்சேரி மக்கள் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.
இதையடுத்து பாண்டிச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இரண்டுசுயேச்சைகளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதால் 17 ஆக அதன் பலம் தற்போது உள்ளது. இதையடுத்து காங்கிரஸ்கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைத்துள்ளது.
தற்போது திமுக கூட்டணியின் பலம் 8 ஆக உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications