பாகிஸ்தான் அமைச்சருடன் தொலைபேசியில் பேசினார் சு. சுவாமி
சென்னை:
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அப்துல் சத்தாரிடம் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமிதொலைபேசியில் பேசினார்.
இதுகுறித்து ஜனதாக்கட்சி இன்று சென்னையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அப்துல் சத்தார் எங்கள் கட்சித் தலைவரிடம் தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது 2 தலைவர்களும் பல உலகப் பிரச்சனைகள் குறித்துப் பேசினார்கள். ஆப்கானிஸ்தான் போரில்தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் எடுத்த தைரியமான முடிவை உலகமேபாராட்டுவதாக சுவாமி கூறினார்.
மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான்களை ஆதரித்துவந்த பாகிஸ்தான் தற்போது அவர்களைமுழுமையாக எதிர்க்க ஆரம்பித்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது என்றார் சுவாமி.
இந்த உரையாடல் சுமார் 10 நிமிடங்கள் நீடித்தது. இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சென்னையில் இன்று (புதன்கிழமை) நிருபர்களுக்குப் பேட்டியளித்த சுவாமி கூறியதாவது,
மத்திய அரசு தற்போது இயற்றியுள்ள தீவிரவாதத் தடுப்புச்சட்டம் மிக அவசியமான ஒன்றாகும். இந்திரா காந்திஆட்சிக் காலத்தில், எமர்ஜென்சியின் போது மிசா சட்டம் பயன்படுத்தப்பட்டது. அதை நான் கடுமையாகஎதிர்த்தேன். அந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதால் அதை நான் எதிர்த்தேன்.
தற்போது இயற்றப்பட்டுள்ள "போடோ" சட்டம் மிகச் சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச்சட்டத்தினால் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.
நோயைக் குணமாக்க அறுவைச் சிகிச்சை செய்தால், உடம்பிலிருந்து சிறிது ரத்தம் சிந்துவதைத் தவிர்க்க முடியாது.அதுபோல தீவிரவாதிகளை அழிக்கும் பணியின் போது பொதுமக்களுக்கும் சிறிது பாதிப்பு இருக்கும் என்றார்சுவாமி.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications