பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது மர்ம மனிதர்கள் ராக்கெட் தாக்குதல்
குவெட்டா:
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியான பலுசிஸ்தானுக்கு அருகே அமைந்துள்ள பாராமிலிட்டரி முகாமின் மீதுஅடையாளம் தெரியாத சிலர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.
ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியான பலுசிஸ்தானில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று குவெட்டாவிலுள்ள பேருந்து ஒன்றில் வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் 2 ராணுவவீரர்கள் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) இரவு பாலுகிஸ்தானுக்கு 70 கிலோமீட்டர் தொலைவில், எல்லை பகுதியில்பிபியானி ஜயாரட் பகுதியில் அமைந்துள்ள பாரா மிலிட்டரி ராணுவ மூகாம் மீது அடையாளம் தெரியாத சிலர்தாக்குதல் நடத்தினர். ஆனால் இதில் யாரும் காயமடையவில்லை.
இந்த மர்ம மனிதர்கள் ராக்கெட் மற்றும் துப்பாக்கிகளைக் கொண்டுதான் தாக்குதல் நடத்தினர். ஆனால் அவர்கள்குறி தவறிவிட்டதால் யாரும் காயமடையவில்லை. இந்த சம்பவத்திற்கு யாரும் இது வரை பொறுப்பேற்கவில்லை.












Click it and Unblock the Notifications