ஆப்கானிஸ்தானுக்குள் அதிரடிப் படையை அனுப்புவோம்: அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானுக்குள் ஆயிரக்கணக்கான வீரர்களை அதிரடியாக அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந் நிலையில் ஆப்கானிஸ்தானுக்குள் அதிரடியாக ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்ப உள்ளதாக அமெரிக்கபாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் கூறினார்.
அவர் கூறுகையில்,
ஆப்கானிஸ்தானுக்குள் வான்வெளித் தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களை அடையாளம் காண தரைப்படையை அனுப்பித்தான் ஆக வேண்டும். இதற்காக ஆயிரக்கணக்கான வீரர்கள் கடும் பயிற்சிக்குஉள்ளாக்கப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர்களில் சென்று இறங்க முயன்ற அமெரிக்கப் படைகள் தலிபான்களின் தாக்குதல் காரணமாக இறங்கமுடியாமல் திரும்பி வந்துவிட்டனர். சில நேரங்களில் காலநிலை மோசமாக இருந்ததால் ஹெலிகாப்டர்களை இயக்கமுடியவில்லை.
இதனால், வேறு வழியில் படைகளை ஆப்கானிஸ்தானுக்குள் இறக்க வேண்டும். அதற்கான நவீன தொழில்நுட்பம்தயாராகி வருகிறது.
நாளை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் இவானோவை சந்தித்துப் பேசிய பின்னர் ஆப்கானிஸ்தானைசுற்றியுள்ள நாடுகளுக்குச் செல்வேன் என்றார்.
பி-52 தாக்குதல் தொடர்கிறது:
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் மீது 27வது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன.
தலைநகர் காபூலை பாதுகாக்க நிறுத்தப்பட்டுள்ள தலிபான் படைகள் மீது பி-52 ரக குண்டு வீச்சு விமானங்கள் கடும்தாக்குதல் நடத்தின. இந்தப் படைகலை சிதறடிப்பதன் மூலம் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் காபூலைநெருங்க வழி செய்ய முடியும்.
இத் தாக்குதலில் தலிபான்களின் தலைமை ராணுவ அலுவலகம் தகர்க்கப்பட்டது.
நார்த்தர்ன் அலையன்சின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நிலை கொண்டுள்ள அமெரிக்கப் படைகள் வழங்கும்யோசனைகளின்படி இந்தத் தாக்குதல் நடந்து வருகின்றன.
ஒரே நேரத்தில் 60 குண்டுகளை பி-52 விமானங்கள் வீசின. இதனால் அந்தப் பகுதி முழுவதும் ஒரே வெடிச் சத்தமும்ஓலச் சத்தமும் கேட்டவண்ணம் இருந்தது.
நேற்று இரவு முழுவதும் காண்டஹாரிலும் மஸார்-ஏ-ஷெரீபிலும் குண்டுகள் வீசிக் கொண்டேயிருந்தனஅமெரிக்க விமானங்கள். பகலிலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications