அதிமுக அரசு ஒரு வெத்து வேட்டு: கருணாநிதி
சென்னை:
தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு வெத்து வேட்டாக, வெறும் புகையை மட்டுமே பரப்பி காற்றை மாசுபடுத்திக்கொண்டிருக்கிறது என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கூறியுள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு கஜானா முழுவதையும் காலி செய்து விட்டு, தற்போது அரசு ஊழியர்களுக்கு தீபாவளி முன் பணம்தருவதற்குக் கூட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.
நிலைமை இப்படி இருக்கும்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல திட்டங்களை மட்டும் தற்போதையஅதிமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்குத் தேவையான நிதி எங்கிருந்து வரும்?
அதிமுக ஆட்சி, அதிகாரத்தில் அமர்ந்து 6 மாதம் ஆகியும் கூட இதுவரை எந்தவித வளர்ச்சித் திட்டமும்மேற்கொள்ளப்படவில்லை. பட்ஜெட்டில் குறிப்பிட்ட எந்தத் திட்டத்தையும் இதுவரை நிறைவேற்றுவதற்கானஅடையாளமே தெரியவில்லை.
உழவர் சந்தைகள் பராமரிக்கப்படாமல் முடங்கிப் போயுள்ளன. இலவச வீட்டு மனைத் திட்டம், செவிலியர்கல்லூரித் திட்டம், தொழில்முனைவோருக்கான பூங்கா என ஒரு திட்டம் உருப்படியாகஅமல்படுத்தப்படவில்லை.
முதல்வர் அலுவலகத்தில் பைல்கள் மலை போல குவிந்து கிடக்கின்றன. ஒரு பைலும் கையெழுத்திடப்படாமல்அப்படியே வைக்கப்பட்டுள்ளது.
வெத்து வேட்டாக வெறும் புகையை மட்டுமே பரப்பிக் கொண்டிருக்கும் அதிமுக அரசு காற்றையும் மாசுபடுத்திக்கொண்டிருக்கிறது என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications