சாப்ட்வேர்: இன்னும் சிறிது காலம் சிரமம் தான்
பெங்களூர்:
சாப்ட்வேர் துறைக்கு இன்னும் சிறிது காலம் சிரமமானதாகத் தான் இருக்கும் என சாப்ட்வேர் வல்லுனர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர்.
"அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியால் இந்திய சாப்ட்வேர் துறையில் ஏற்பட்டுள்ள தாக்கம்" என்றதலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய இன்போசிஸ் சாப்ட்வேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்நந்தன் நில்கேனி,
சாப்ட்வேர் துறையில் இன்னும் 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு சீனாதான் இந்தியாவுக்குப் பெரும் சவாலாக விளங்கும்.அவர்கள் போட்டியை எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் நாம் திறமைகளை 2 ஆண்டுகளுக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின் வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருக்கும் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களை அதிகமாக அணுக மாட்டார்கள். ஆனாலும் தகவல்நுட்பத்தில் சீனா அதிகக் கவனம்செலுத்தி வருவதால் அவர்கள் இந்தியாவுக்கு கடும் போட்டியை தோற்றுவிப்பார்கள்.
எனவே இந்தியாவிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவர்களால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொண்டுசமாளிக்க தேவையான திறமைகளை அதிகப்படுத்திக் கொள்ள முயல வேண்டும் என்றார்.
பிற சாப்ட்வேர் வல்லுனர்களும் பொருளாதார வல்லுனர்களும் பேசுகையில், அமெரிக்காவால் ஏற்பட்டுள்ளபொருளாதார சீரமைப்பால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிரமமான நிலையை தொடர்ந்து சமாளிக்கவேண்டியிருக்கும்.
இதனால் அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில் உள்ள சாப்ட்வேர் தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளஇந்திய நிறுவனங்கள் தயாராக வேண்டும். அந் நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில்வர்த்தக, மார்க்கெட்டிங் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
ஸ்டான்போர்ட் பல்கலை கழக பேராசிரியர் சி. ராம் அகேலா கூறுகையில், அமெரிக்க சாப்ட்வேர் நிறுவனங்கள்எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு அதன்படி இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள்செயல்பட வேண்டும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications