ரவுடி வீரமணியைச் சுட்டுப் பிடிக்க உத்தரவு
சென்னை:
பிரபல ரவுடி வீரமணியைப் பிடிக்கும் போது போலீசார் சந்திக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவரைச்சுட்டுப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன் கூறினார்.
சென்னையில் நேற்று(வியாழக்கிழமை) இதுகுறித்து பேட்டியளிக்கும்போது அவர் மேலும் கூறியதாவது:
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சாட்சி சொல்ல வந்த ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில்வீரமணியைத் தேடி வருகிறோம். இதற்காக 10 தனிப்படைப் போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர்.
வீரமணி முதலில் பாண்டிச்சேரிக்கும், மகாபலிபுரத்திற்கும் இடைப்பட்ட பகுதிக்குப் படகு மூலம் தப்பிச் சென்றதாகஎங்களுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் படை அந்த இடத்துக்கு விரைந்து சென்றது, ஆனால் வீரமணிதப்பிச் சென்றுவிட்டான்.
மேலும் சென்னையிலிருந்து நாகப்பட்டினம் வரையுள்ள கடற்கரையோரப் பகுதிகளிலும், மீன்பிடிக் குப்பங்களிலும்போலீசார் தேடி வருகின்றனர். விரைவில் வீரமணி பிடிபடுவான் அவனைப் பிடிப்பதற்கு ஷூட்டிங் ஆர்டர்போடப்படவில்லை. ஆனால் போலீசார் சந்திக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப, அவனைச் சுட்டுப் பிடிக்கவும்உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னையில் ரவுடியிசம் அதிகரித்திருப்பது உண்மைதான். ஆனால் தற்போது அதைஅடக்கும் முயற்சியில் போலீஸ் தீவிரமாக இறங்கியுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) மட்டும் சென்னையில் 50ரவுடிகளைக் கைது செய்துள்ளோம் என்றார் முத்துக்கருப்பன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications