ஆப்கானிஸ்தான் சிறைகளில் நிரம்பும் தலிபான் எதிர்ப்பாளர்கள்
பெஷாவர்:
தலிபான் ஆட்சிக்கு எதிராகச் செயல்படுபவர்களைக் கைது செய்து, அவர்களை ஆப்கானிஸ்தான் சிறைகளில்தலிபான்கள் நிரப்பி வருகிறார்கள் என்று தலிபான்களால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட பிரான்ஸ்நாட்டு பத்திரிக்கையாளர் கூறினார்.
கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி, அத்துமீறி ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்ததாக பிரான்ஸ் நாட்டில்வெளியாகும் பாரிஸ் மேட்ச் என்ற பத்திரிக்கையின் நிருபர் மைகேல் பெய்ரார்டு மற்றும் 2 பாகிஸ்தானியநிருபர்களை தலிபான் ராணுவத்தினர் கைது செய்தனர்.
இவர்கள் 3 பேரும் ஜாலலாபாத்தில் உள்ள சிறையில் வைக்கப்பட்டு, 25 நாட்களுக்குப் பிறகு விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பெய்ரார்டு கூறுகையில்,
நான் முஸ்லீம்களைப் போல புர்கா அணிந்துகொண்டு ஆப்கான் எல்லைக்குள் நுழைந்தபோது தலிபான்ராணுவத்தினர் என்னைக் கைது செய்தனர்.
நான் சிறையிலிருந்த போது நாள்தோறும் அங்கு பல ஆப்கான் அரசியல்வாதிகள் கைது செய்ப்பட்டுசிறையிலடைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் பலரைப் பேட்டியும் எடுத்தேன்.
கடந்த 1996ம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானில் ஆட்சியை ஏற்படுத்திய போது பல ஆப்கானியர்கள்,தலிபான்களுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். ஆனால் தற்போது அவ்வாறு இல்லை என்று அவர்கள் கூறினார்கள்.
தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக யாராவது செயல்படுவது போலத் தெரிந்தால், அவர்கள் கைது செய்யப்பட்டுசிறையிலடைக்கப்படுகிறார்கள்.
கடந்த செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் தாக்குதல் நடத்தப்பட்டபோது அந்தச் சிறையில் மொத்தம் 150 பேர்இருந்தனர். ஆனால் தற்போது அங்கு 400 பேர் உள்ளனர்.
புதிதாகச் சிறையிலடைக்கப்பட்டு வருபவர்கள் அனைவரும் அரசியல் கைதிகள். அவர்கள் அனைவரும் தலிபான்எதிர்ப்பு கொள்கை உடையவர்கள் என்று அவர்கள் கூறினார்கள்.
இன்னும் தலிபான் எதிர்ப்புக் கொள்கை உடையவர்களைக் கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றார்அந்த பிரான்ஸ் நிருபர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications