பாக். அணு ஆயுதங்களைக் கைப்பற்ற தயார் நிலையில 2,200 அமெரிக்க வீரர்கள்
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் பர்வேஸ் முஷாரபின் ஆட்சி கவிழ்ந்தால், அந் நாட்டின் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின்கைகளில் சிக்கிவிடாமல் தடுக்க 2,200 வீரர்களை தனது போர்க் கப்பலில் அமெரிக்கா தயார் நிலையில்வைத்துள்ளது.
அமெரிக்கக் கடற்படையின் 15th Marine Expeditonary unit என்ற பிரிவைச் சேர்ந்த இந்த வீரர்கள் உடனடியாகபாகிஸ்தானுக்குள் ஹெலிகாப்டர்களில் நுழைந்து அணு ஆயுதங்கள் உள்ள இடங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில்கொண்டு வருவர்.
இது தவிர பாகிஸ்தான் ஆயுதங்களைக் கைப்பற்ற இஸ்ரேலிய கமாண்டோ படையின உதவியுடன் மேலும்ஆயிரக்கணக்கான வீரர்களை அமெரிக்கா தயார்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் விரைவிலேயே பர்வேஸ் முஷாரபின் ஆட்சியை பின் லேடன்-தலிபான ஆதரவு தீவிரவாதிகளும்,ராணுவ அதிகாரிகளும் சேர்ந்து கவிழ்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந் நிலையில் பாகிஸ்தானின் அணுஆயுதங்கள் தீவிரவாதிகளிடம் சிக்கும் என்பதால் எப்பாடுபட்டாவது அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தஅமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
தேவைப்பட்டால் பாகிஸ்தான் ராணுவத்துடன் மோதவும் அமெரிக்கப் படைகள் தயாராகி வருகின்றன.












Click it and Unblock the Notifications