கைதியைக் கடத்தி கொலை: வீரமணியின் சரண்?
சென்னை:
உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து ரவுடி சண்முகத்தை கடத்திச் சென்று அரிவாளால் வெட்டிக் கொன்ற கும்பலின்தலைவன் அயோத்திக் குப்பம் தாதா வீரமணி நாளை நீதிமன்றத்தில் சரணடைலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் வழக்குத் தொடர்பாக சிறையிலிருந்து நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட சண்முகத்தைவீரமணியின் கும்பல் கடத்திச் சென்றது. போலீசுக்கே தெரியாமல் அவர் கடத்தப்பட்டார்.
திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் பகுதியில் வைத்து சண்முகத்தை இக் கும்பல் வெட்டிக் கொன்றது. வீரமணியின்முன்னிலையில் தான் இந்தக் கொலை பட்டப் பகலில், நடு ரோட்டில் அரங்கேறியது.
இதையடுத்து வீரமணியை போலீஸ் தேடியது. அவர் தலைமறைவாகிவிட்டதை போலீஸ் கண்டுபிடித்தது.அவரைப் பிடிக்க தனிப படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.
அவர் பாண்டிச்சேரி மூர்த்திகுப்பம் மீனவர் குடியிருப்புப் பகுதியில் மறைந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீஸ் அங்கு சென்றது. ஆனால், அவர் தப்பிவிட்டார்.
இந் நிலையில் வீரமணி தானாகவே நாகப்பட்டிணம் அல்லது கடலூர் நீதிமன்றத்தில் ஆஜராகத் திட்டமிட்டிருப்பதாகதகவல்கள் கிடைத்துள்ளன. அவர் இப்போது காரைக்கால் பகுதியில் மீனவர்கள் உதவியுடன் மறைந்திருப்பதாகக்கூறப்படுகிறது.
முதலில் வீரமணியைத் தப்ப வைக்க சில ஆளும்கட்சி அரசியல் பெரும்புள்ளிகள் முயன்றனர். ஆனால், ஏற்கனவேபல வன்முறைகள் தொடர்பாக நீதிபதிகளிடம் கண்டனம் பெற்றுள்ளதால் முதலில் அவரை சரணடைய வைத்துபிறகு காப்பாற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று மாலை அல்லது நாளை வீரமணி நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று தெரிகிறது.
சென்னை திமுக பேரணியில் போலீஸ் மற்றும் அதிமுகவினர் உதவியுடன் கொலை வெறித் தாண்டவமாடினார்வீரமணி என்பது குறிப்பிடத்தக்கது. பார்ப்பவர்களை எல்லாம் இவரது ஆட்கள் வெட்டிச் சாய்த்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications