சென்னை சிறையில் அடைக்கப்படுகிறார் ரவுடி வீரமணி
சென்னை:
சென்னை தாதாவான அயோத்திக்குப்பம் வீரமணியை சென்னை மத்திய சிறையில் அடைக்க கோர்ட்உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலிருந்து ரவுடி சண்முகம் என்பவரை கடத்தி அவரை அரிவாளால் வெட்டியதாகஅயோத்திக்குப்பம் வீரமணி உள்ளிட்ட சிலரை போலீஸார் தேடி வந்தனர்.
போலீஸாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்த வீரமணியும் அவரது கும்பலும் திருத்துறைப்பூண்டிமற்றும் பாண்டிச்சேரி நீதிமன்றங்களில் சரண் அடைந்தனர்.
வீரமணியை 15 நாள் காவலில் வைக்குமாறு திருத்துறைப்பூண்டி நீதிபதி குணவதி உத்தரவிட்டார். இதையடுத்துஅவர் திருத்துறைப்பூண்டி துணை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தன்னை சென்னை மத்திய சிறையில் அடைக்குமாறு வீரமணி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுஅவரை சென்னைக்கு மாற்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாலை வீரமணி சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு வரப்பட்டுஅடைக்கப்படுகிறார்.












Click it and Unblock the Notifications