பாண்டிச்சேரி: அமைச்சர்கள் பதவியேற்பு விழா ரத்து
பாண்டிச்சேரி:
நாளை நடைபெறுவதாக இருந்த புதுவை அமைச்சர்கள் பதவியேற்பு விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 27ம் தேதி பாண்டிச்சேரியில் புதிய முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார். அப்போதுஅமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.
புதுவை காங்கிரஸ் கட்சியில், கண்ணன் தலைமையிலான புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சி 4 எம்.எல்.ஏக்களுடன்இணைந்தது. மேலும் 2 சுயேச்சை எம்.எல்.ஏக்களும் காங்கிரசில் இணைந்தனர். இதனால் 30 உறுப்பினர்களைக்கொண்ட பாண்டிச்சேரி சட்டமன்றத்தில், காங்கிரஸ் கட்சியின் பலம் 17 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் 3 அமைச்சர்கள் நாளை (புதன்கிழமை) பதவியேற்பதாக, முதல்வர் ரங்கசாமி, புதுவை துணை நிலையஆளுநர் ரஜனி ராயிடம் கடிதம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுவந்தன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு 2 அமைச்சர் பதவியும், கண்ணன் கட்சியிலிருந்து வந்தவர்களில்ஒருவருக்கு அமைச்சர் பதவியும் அளிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால் இன்று திடீரென பதவியேற்பு விழா ரத்துசெய்யப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் நியமனத்தில்ஏற்பட்டுள்ள சிக்கலை அடுத்து, பதவியேற்பு விழா தள்ளிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், பதவியேற்பு விழாவிற்கான மறுதேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications