சென்னை ரயில் நிலையத்தில் நிர்வாணமாக ஓடிய வாலிபர்
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திடீரென ஒரு வாலிபர் நிர்வாணமாக ஓடியதால் அங்கு பெரும் பரபரப்புஏற்பட்டது.
வெளிநாடுகளில் விளையாட்டு நடக்கும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் திடீரென "வித்தவுட்"டில் ஓடிமக்களை நிலைகுலைய வைப்பது சகஜமான நகழ்ச்சிகள். அது போன்ற ஒரு சம்பவம் இந்தியாவின்மெட்ரோபாலிடன் நகரங்களில் ஒன்றான சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
கேரள மாநிலம் ஆலப்புழையிலிருந்து சென்னைக்கு வரும் ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போலசெவ்வாய்க்கிழமை காலை 7.15 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. அதிலிருந்துஇறங்கிய ஒரு வாலிபர் ரயிலிலிருந்து இறங்கி பிளாட்பாரத்தில் அமர்ந்தார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் அங்கிருந்து எழுந்து தனது உடைகளை களையத் தொடங்கினார். பிறந்தகுழந்தையின் நிலைக்கு மாறிய அவர் அங்கிருந்து தாறுமாறாக ஓடத் தொடங்கினார். அவரது செயலைப் பார்த்துரயில் நலையத்தில் இருந்தவர்கள் நடுநடுங்கிப் போய் அங்கிருந்து ஓடினர்.
இதற்கான காரணத்தை அறியாதவர்கள் ரயில்நிலையத்தில் வெடிகுண்டு தான் வைப்பட்டுள்ளது என்று தவறாகநினைத்து அவர்களும் தாறுமாறாக ஓடினார்கள்.
அதனால் ரயில் நிலையத்தையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய அந்த நபரை போலீஸார் விரட்டிப் பிடித்து "ஆடைதானம்" வழங்கி அவரை அடக்கினர். விசாரித்தபோது அந்த நபர் சரிவர பேசவில்லை. மன நிலை சரியில்லாதவர்என்பது பின்னர் தெரிய வந்தது.
இதையடுத்து கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் அவரை போலீஸார் கொண்டு போய் சேர்த்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications