போலீஸ் சங்கத்திற்கு அங்கீகாரம் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
தமிழ்நாடு காவல் துறை சங்கத்திற்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் நாடு காவல் துறை காவலர்கள் சங்கம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதற்கு அரசு அங்கீகாரம்அளிக்கவில்லை. இந்த சங்கத்திற்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு காவலர்கள் சங்கதலைவர் கே. சிவக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
போலீசாரின் நலனுக்காக போலீசார் சங்கம் வைக்க அனுமதியளிக்க வேண்டும் என நீண்ட காலமாககோரிவருகிறோம். சென்ற மாதம் 5ம் தேதி தமிழ்நாடு காவல்துறை காவலர்கள் சங்கம் அமைக்கப்பட்டது.
சங்க பதிவாளரிடம் இந்த சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்க கோரிபோலீஸ் டைரக்கடர் ஜெனரலிடம் சங்கம் துவங்கிய தினத்தன்றே விண்ணப்பித்திருந்தோம். ஆனால் அரசுஅங்கீகாரம் அளிக்கவில்லை.
ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலின் போதும் தாங்கள் ஆட்சிக்கு போலீசார் சங்கம் அமைக்க அனுமதி தருவதாகஅரசியில் கட்சியினர் கூறுவார்கள். ஆனால் தேர்தல் முடிந்து ஆட்சிக்குவந்த பின் தாங்கள் கூறிய வாக்குறுதியைவிடுத்துவிட்டு சங்கம் அமைக்க முயற்சிப்பவர்களுக்கு துன்பங்களைத்தான் தருவார்கள்.
கேரளா, மேற்கு வங்காளம், பீகார் மற்றும் திரிபுரா மாநிலங்களில் போலீசார் சங்கம் அமைக்க அனுமதிவழங்கப்பட்டுள்ளது. அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
கான்ஸ்டபிள்கள் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காவல்துறை காவலர் சங்கத்திற்கு அரசு அங்கீகாரம்வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications