போலீஸ் சங்க விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் போலீஸ் சங்கம் அமைப்பதற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் போலீஸ் சங்கம் அமைக்கக் அனுமதி கோரி கடந்த சில ஆண்டுகளாக, போலீசார் போராடிவருகின்றனர். ஆனால் தமிழக அரசு இதற்கு அனுமதி வழங்காமல் மறுத்துவருகிறது.

இதனால் இந்தப் பிரச்சனை உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தமிழ்நாடு போலீசார் சார்பாக சிவக்குமார்என்பவர் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் போலீஸ் சங்கம் அமைப்பதற்கு, தமிழக அரசும் தமிழகக் காவல்துறைத் தலைவரும் மறுத்துவருகின்றனர்.

தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் போலீஸ்சங்கத்திற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதுபோல தமிழகத்திலும் போலீஸ் சங்கம் அமைக்க அனுமதியளிக்க வேண்டும் என்று தமிதுக காவல் துறைத்தலைவருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று (புதன்கிழமை) காலை விசாரணக்கு வந்தது.ஆனால் மனு மீதான விசாரணையை நீதிபதிகள், வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+