ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: சாட்சிகளிடம் போலீசார் விசாரணை
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கையில் பட்டியலிடப்பட்ட,விசாரிக்கப்படாத சாட்சிகளை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்துச் சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன்,இளவரசி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கடந்த 1998ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி முதல், முதலாவது தனிநீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை நடைபெற்றுவருகிறது. இவ்வழக்கில் மொத்தம் 1,058 சாட்சிகள் பட்டியலிடப்பட்டிருந்தனர். இதுவரை அரசுத் தரப்பில்மொத்தம் 258 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பிரபல இசையமைப்பாளர்கள் கங்கைஅமரன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர்குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
இந்நிலையில் குறுக்கு விசாரணை செய்யப்படாத சாட்சிகளை மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை செய்யஅனுமதியளிக்கக் கோரி ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த முதலாவது தனிநீதிமன்ற நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன், குறுக்கு விசாரணைசெய்யப்படாத சாட்சிகளில் 81 பேரை மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை செய்ய அனுமதியளித்தார்.
இதுவரை இவர்களில் 12 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா தரப்பில் தாக்கல்செய்யப்பட்டுள்ள மற்றொரு மனுவில், 81 பேரைத் தவிர மேலும் 60பேரை மீண்டும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுதற்போது முதலாவது தனிநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், குற்றப்பத்திரிக்கையில் பட்டியலிடப்பட்ட 1,058 சாட்கிளில், இதுவரை விசாரிக்கப்பட்ட 258சாட்சிகள் தவிர, மீதமுள்ள சாட்சிகள் அனைவரையும் விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்திட்டமிட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications