சென்னை மாநகராட்சி தேர்தல் வன்முறை - மேலும் 8 வார்டு வாக்குப் பெட்டிகளுக்கு சீல்
சென்னை:
சென்னையில் 8 மாநகராட்சி வார்டுகளில் தேர்தலின்போது பதிவான வாக்குச் சீட்டுக்கள் அடங்கியபெட்டிகளுக்கும், அவை உள்ள அறைக்கும் சீல் வைக்க சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் வார்டு தேர்தலின்போது பெருமளவு முறைகேடுகள் நந்ததாக திமுக தரப்பில்புகார் கூறப்பட்டது. இதையடுத்து பல வார்டுகளில் மறு தேர்தல் நடந்தது.
இருப்பினும், வாக்கு எண்ணிக்கையின்போது யாருமே எதிர்பாராத வகையில் வாக்கு எண்ணும் மையங்களைக்கைப்பற்றுதல், தேர்தல் அதிகாரிகளை மிரட்டுதல் என பயங்கர சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து திமுக ல்ெலும்என்று எதிர்பார்க்கப்பட்ட பல வார்டுகளில் அதிமுகவினர் வற்றி பெற்றனர்.
இந்த நிலையில் 155-வது வார்டில் துணை மேயர் கராத்தே தியாகராஜன் பெற்ற வெற்றியை எதிர்த்து அவரைஎதிர்த்து போட்டியிட்டுத் தோற்ற திமுக வேட்பாளர் துரை சண்முகம் முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் குமார், 155-வது வார்டு வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.
அதைப் பின்பற்றி தற்போது மேலும் 8 வார்டு திமுக வேட்பாளர்கள் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். வார்டுஎண் 60, 69, 92, 112, 137, 139, 153, 154 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த திமுக வேட்பாளர்கள் நீதிபதி அசோக்குமார் முன் ஆஜராகி தனித்தனியாக மனுக்களைச் சமர்ப்பித்தனர்.
தங்களது மனுக்களில், அதிமுகவினர் அராஜகமாக நடந்து கொண்டு, வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது, கள்ளஓட்டுப் போடுவது, வாக்கு எண்ணும் மையங்களைக் கைப்பற்றுவது என முறைகேடுகளைச் செய்தனர் நியாயமானமுறையில் வாக்குப் பதிவு நடக்கவில்லை.
எனவே இந்த வார்டில் அதிமுகவினர் பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றுகோரியுள்ளனர்.
மனுக்களை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி அசோக் குமார், சம்பந்தப்பட்ட 8 வார்டுகளின் வாக்குகள் உள்ளபெட்டிகளுக்கும், ரிப்பன் பில்டிங்கில் வாக்குப் பெட்டிகள் உள்ள அறைக்கும் சீல் வைக்க உத்தரவிட்டார். வழக்கின்அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 10ம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications