விமானங்களைக் கடத்த முயற்சி: சென்னை விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு
சென்னை:
அமெரிக்காவில் விமானத்தைக் கடத்தி தாக்குதல் நடத்தப்பட்டதைப் போல் தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்திதாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனின் ஆட்கள் காத்மண்டுவில் பதுங்கியிருப்பதாகவும், அவர்கள் நேபாளவிமானங்களைக் கடத்தி, டெல்லியில் உள்ள முக்கியக் கட்டடங்களைத் தாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் ஒருமிரட்டல் தகவல் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்தது.
இத்தகவலை உடனடியாக நேபாள விமானத் துறை அதிகாரிகளுக்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள்அனுப்பிவிட்டனர். இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அலுவலகத்துக்கும் இது பற்றிய தகவல்தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த சிவில் விமானப்போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமானநிலையத்துக்கு உள்ளே வரும் பயணிகளிடமும் விமான நிலையத்தை விட்டு வெளியேறும் பயணிகளிடமும் தீவிரசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications