ஹர்ஷத் மேத்தா மீண்டும் கைது

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மோசடி பங்குத் தரகர் ஹர்ஷத் மேத்தா புதிய வழக்கொன்றில் நேற்று நள்ளிரவில் சி.பி.ஐயால் கைதுசெய்யப்பட்டார். அவரது இரு மோசடி சகோதரர்களும் கைது செய்யப்பட்டனர்.

பங்கு பத்திர மோசடிக்கு பேர் போனவர் ஹர்ஷத் மேத்தா. சுமார் ரூ. 4,000 கோடி அளவுக்கு மோசடி செய்துநாட்டின் பொருளாதாரத்தையே நிலை குலையச் செய்தார். பல ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தஅவர் 1992ம் ஆண்டு சிக்கினார். சிறையில் அடைக்கப்பட்ட அவர் சட்டத்தின் ஓட்டைகள் வழியே வெளியேவந்தார்.

இப்போது மீண்டும் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கிகளுக்கு அவர் அளித்த உத்தரவாதத்தைமீறியதற்காக அவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவில் திடீரென அவரது வீட்டில் நுழைந்த சி.பி.ஐ. அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. பின்னர்அவர் கைது செய்ப்பட்டார். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
ஹர்ஷத் மேத்தாவின் சகோதரர்கள் அஸ்வின், சுதிர் ஆகியோரையும் சி.பி.ஐ. கைது செய்தது. இவர்கள் மூவரும்மும்பை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமானகட்டடங்களிலும் சோதனைகள் நடந்து வருகின்றன.

இவர்களிடம் பல கோடி மதிப்புள்ள மோசடி பங்கு பத்திரங்கள் உள்ளன. ஆனால், அவை தொலைந்துவிட்டதாகமூவரும் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். இது தொடர்பாகவும் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+