தீவிரவாதிகளிடமிருந்து இந்தியாவுக்கு பெரும் ஆபத்து: ஜேட்லி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சர்வதேச தீவிரவாதிகளிடமிருந்து இந்தியாவுக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது என மத்திய சட்ட அமைச்சர்அருண் ஜேட்லி கூறினார். இதனால், தீவிரவாதத்தை ஒடுக்க பொடோ மாதிரியா மிகக் கடுமையான சட்டம்தேவைப்படுகிறது என்றார்.
தீவிரவாதத்துக்கு இந்தியா இதுவரை 54,000 உயிர்களை பலி கொடுத்துள்ளார். உள்நாட்டுப் போர் நடந்திருந்தால்கூட இத்தனை உயிர்கள் பலியாகியிருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு தீவிரவாதம் போரைவிட கொடுமையானவிஷயமாகப் போய்விட்டது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறுபவர்கள் எண்ணிக்கை 6.2 சதவீதம் தான். இப்படிப்பட்டசூழ்நிலையில் இருக்கும் சட்டங்களைக் கொண்டு தீவிரவாதத்தை ஒடுக்கிவிட முடியாது. இதனால் தான் பொடோசட்டம் கொண்டு வந்தோம் என்றார் ஜேட்லி.












Click it and Unblock the Notifications