குமரியில் 2000 மீனவர்கள் சாலை மறியல்
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
52 வகை கடல் வாழ் மீன்களைப் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடையை நீக்க வேண்டும் என்றுமீனவர்கள் கோரி வருகின்றனர்.
இது தொடர்பாக மாநில மீன்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தடையைநீக்குவது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் 2000க்கும்மேற்பட்ட மீனவர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
52 வகை மீன்களைப் பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று அவர்கள்கோரிக்கை விடுத்தனர்.
இந்தப் போராட்டம் காரணமாக திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டன.












Click it and Unblock the Notifications