இலங்கை: "ரூபவாஹினி" தலைவர் ராஜினாமா
கொழும்பு:
எதிர்கட்சிகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு இலங்கை அரசுக்குச் சொந்தமான "ரூபவாஹினி" டிவி நிறுவனத்தைப்பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்ட அதன் தலைமை அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளின் தரத்தைக் குறைக்கும் வகையிலும்உள்ள பிரச்சாரங்கள் டிவியில் இடம்பெறுகின்றன. இதற்குக் காரணம் டிவி நிலைய அதிகாரியான சனத் குணதிலகேதான் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதையடுத்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் இவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) குணதிலகே தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் அதிபர்சந்திரிகாவுக்கு செய்தித் தொடர்பு ஆலோசகராகவும் இருந்தவர். மேலும் சந்திரிகாவின் நம்பிக்கையைப் பெற்றஅதிகாரிகளில் இவரும் ஒருவராக இருந்தார்.
ஆனால் சமீபத்தில் சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணிக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற முக்கியத்தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார் என்றும், சந்திரிகா தலைமையிலான அரசு கவிழ்வதற்குமுக்கிய காரணம்இவர் தான் என்றும் கூறப்பகிறது.
இருப்பினும் தனது ராஜினாமா குறித்து இதுவரை குணதிலகே எதுவும் விளக்கம் அளிக்கவில்லை. கடந்த ஒருவாரத்திற்கு முன்பு டிவி நிலையத்தில் இவருக்கு அடுத்த பொறுப்பில் இருந்த வஜிரா நரம்பனவா என்றஅதிகாரியும், தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சித் தலைவருக்கு சந்திரிகா சவால்
1987ல் அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கும் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தைப் போல, இப்போது விடுதலைப் புலிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர்விக்ரமசிங்கே ஒரு ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியுமா என்று இலங்கை அதிபர் சந்திரிகா கேட்டுள்ளார்.
தனி ஈழம் வேண்டும் என்று போராடி வரும் விடுதலைப் புலிகளின் கொள்கைகளை அவர் ஆதரிக்கிறாரா என்பதுகுறித்தும் விக்ரமசிங்கே விளக்க வேண்டும் என்றும் சந்திரிகா கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications