அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வருமா?: சுவாமி சந்தேகம்
மதுரை:
தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை நீடித்தால், அடுத்த 6 மாதங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு சம்பளம்வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம்சுவாமி கூறினார்.
இதுகுறித்து மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும் போது அவர் மேலும்கூறியதாவது:
கடந்த திமுக அரசு நிதித்துறையைச் சரியாகக் கையாளாததால், தற்போது தமிழக அரசின் நிதி நிலைமை மிகவும்மோசமாகியுள்ளது. இந்தச் சிக்கலைத் தீர்க்க வழிகாணமுடியாமல் தற்போதைய அதிமுக அரசும் திகைக்கிறது.
தமிழக அரசு இதுகுறித்து உடனடியாக ஆலோசனை நடத்தி, நிதிநிலைமையைச் சீர்செய்ய வேண்டும். மத்தியில்தற்போதைய மதவாத பாரதிய ஜனதா ஆட்சியை அகற்றிவிட்டு, மதசார்பற்ற அரசை அமைப்பதற்கு நான்தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். அந்த முயற்சி வெற்றிகரமாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.
பெரியாறு அணைப் பிரச்சனையில், வெளிநாட்டு நிபுணர்களின் ஆய்வு தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டுக்குகேரள அரசு தெரிவித்துவிட்டது. எனவே 142 அடி உயரத்திற்கு அணையில் நீரைத் தேக்கி வைக்கலாம் என்றுஇந்திய நிபுணர்கள் அளித்த அறிக்கையை கேரள அரசு நம்புகிறது என்று எடுத்துக் கொள்ளலாம் என்று சுவாமிகூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications