அந்தியூர் அருகே வீரப்பன் கூட்டாளி கைது

Subscribe to Oneindia Tamil

அந்தியூர்:

அந்தியூர் அருகே சந்தன வீரப்பன் கூட்டாளியான சின்னப்பி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தன மரக் கடத்தல் வீரப்பனை தேடும் பணியில் தமிழக-கர்நாடக அதிரடிப்படையினர் தீவிர தேடுதல்வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வீரப்பன் கூட்டாளியான சின்னப்பி (45) என்பரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் முன்னர்கைது செய்து விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1993ம் ஆண்டு தோணிமடுவு காட்டுப்பகுதியில் கண்ணி வெடி வைத்து வீரப்பன் கும்பலைச் சேர்ந்தவர்கள்போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இது குறித்து பர்கூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்பு கொண்டிகருந்த 75 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் வீரபப்பனுக்குவெடி மருந்து மற்றும் உணவு பொருட்களை சப்ளை செய்தது குற்றத்திற்காக சின்னப்பி என்பவர் தேடப்பட்டுவந்தார்.

இவரை கர்நாடக போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்து, மைசூர் சிறையில் அடைத்தனர். எட்டரை ஆண்டுகால சிறை வாசத்திற்கு பிறகு இவர் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்.

ஆனாலும் இவரை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இவரது நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமளிக்கும்விதமாக அமைந்ததால், பர்கூர் காவல் நிலையத்தில் இவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு தொடர்பாகஇவரை கைது செய்தனர்.

சின்னப்பியை. அவரது வீட்டில் வைத்து பவானி போலீஸ் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார்கைது செய்தனர்.

இவரிடம் விசாரணை நடத்திய பின் இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு கிருஷ்ணன் இவரை 15நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சின்னப்பி கோவை சிறையில் அடைக்கப்படார்.

இதற்கிடையே பலத்த மழை காரணமாக வீரப்பன் தேடுதல் வேட்டை சிறிது தடைபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+