தமிழக-கேரள எல்லையில் நிலச்சரிவு: 40 பேர் பரிதாப சாவு
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஆம்பூரி அருகே பெய்த கடும் மழையின்காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 34 பேர் மண்ணில் புதைந்து இறந்தனர். இதில் 10 பேர்குழந்தைகள், 12 பேர் ஆண்கள், 12 பேர் பெண்கள்.
தமிழக-கேரள எல்லையில் கருஷிமலா மலையின் மீது இந்தக் கிராமம் அமைந்துள்ளது.இந்தப் பகுதியில் சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது.
இங்கு திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த 50 பேர் 6 வீடுகளில் தங்கியிருந்தனர்.மழையினால் நேற்றிரவு திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் வீடுகளைசுற்றியிருந்த பகுதியில் இருந்த மண்ணை அரித்துச் சென்றது.
இதையடுத்து 6 வீடுகளும் மண்ணில் புதைந்தன. இதில் 34 பேர் மண்ணில் புதைந்துஇறந்தனர். மண்ணில் புதையும்போது அவர்கள் இட்ட ஓலம் அப் பகுதியையே அலறவைத்தது.
உடனடியாக பொது மக்கள் கூடி வந்து மண்ணை அப்புறப்படுத்தி அவர்களை மீட்கமுயன்றனர். ஆனால், காட்டு வெள்ளம் மிக வேகமாக மண்ணை அரித்து வீடுகளைப்புதைத்தது.
இறந்தவர்களில் 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 4 பேரின் உடல்கள்இன்னும் மீட்கப்படவில்லை. நிலச்சரிவில் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை, சூறவளிக் காற்று, மின்தடை காரணமாக மீட்பு பணிபாதிக்கப்பட்டுள்ளது. போலீசார், ராணுவ வீரர்கள், மற்றும் தீயணைப்பு படையினர் வந்தபின் மீட்பு பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.மீட்பு பணியில் மக்களும் உதவி செய்துவருகின்றனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications