மஷார்-ஏ-ஷெரீப் நகரை கைப்பற்றியது தலிபான எதிர்ப்புப் படை
காபூல்:
தலிபான் வசமிருந்த முக்கிய நகரமான மஷார்-ஏ-ஷெரீப் நகரை அப்துல் ரஷீத்தோஸ்தம் தலைமையிலான படையினர் கைப்பற்றியுள்ளனர். இது தலிபன்களுக்குஏற்பட்டுள்ள மிக முக்கிய முதல் தோல்வியாகும்.
நார்த்தர்ன் அலையன்ஸ் கூட்டணிப் படையில் முக்கிய பங்கு வகிப்பவர் தோஸ்தம்.இவரது படைகள் வட மேற்கு ஆப்கானிஸ்தானை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.இவருக்கு உஸ்பெக் இனத்தைச் சேர்ந்தவர். இதனால், இவருக்கு உஸ்பெகிஸ்தான் முழுஆதரவு வழங்கி வருகிறது.
அமெரிக்க விமானங்கள் விண்ணிலிருந்து குண்டு மழை பொழிந்து தோஸ்தமின்படைகளுக்கு உதவின.
கடந்த ஒரு மாதமாக அமெரிக்காவின் கடும் தாக்குதலுக்கு உள்ளான முக்கியநகங்களில் மஷார்-ஏ-ஷெரீபும் ஒன்று. அமெரிக்க குண்டு மழையால் இந் நகரில்பாதுகாப்புக்கு நின்றிருந்த தலிபான் படைகள் நிலை குலைந்து வந்தன.
இதையடுத்து தோஸ்தமின் படைகள் டாங்கிகள், கவச வாகனங்களில் இந்த நகரைநோக்கி முன்னேறின. இந்தப் படைகளுக்கு அமெரிக்க விமானங்கள் விண்ணிலிருந்துபாதுகாப்பு அளித்தன.
தலிபான் படைகளின் நடமாட்டம் குறித்து விண்ணில் இருந்து அமெரிக்கவிமானங்கள் விவரம் தர அதைப் பயன்படுத்தி இரவும் பகலுமாக தோஸ்தமின்படைகள் தரை வழித் தாக்குதல் நடத்தின. நேற்று முன் தினம் இந்தப் படைகள்மஷார்-ஏ-ஷெரீபிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டிருந்தன.நேற்று இந்தப் படை அதிரடியாக இந்த நகருக்குள் நுழைந்து தலிபான்களைவிரட்டியடித்தன.
இது குறித்து இப் படைகளின் தலைவர் தோஸ்தம் கூறுகையில், மிக குறுகிய காலத்தில்மஷார்-ஏ-ஷெரீப் நகரத்தை கையப்பற்றியுள்ளோம். விமான தளம் உள்ளிட்டஅனைத்தையும் நாங்கள் கைப்பற்றிவிட்டோம். தலிபான் தரப்பில் 90 வீரர்கள்கொல்லப்பட்டனர். அதன் பின் அவர்கள் மஷார்-ஏ-ஷெரீப் நகரைவிட்டுவெளியேறிவிட்டனர்என்று கூறினார்.
மஷார்-ஏ-ஷெரீப் நகரை நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் கைப்பற்றிவிட்டதைதலிபானும் ஒப்புக் கொண்டுள்ளது.
மஷார்-ஏ-ஷெரீப் நகரை கைப்பற்றியுள்ளதன் மூலம் நார்த்தர்ன் அலையன்ஸ்படையினருக்கு உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானுடன் நேரடி தரை வழித்தொடர்பு இனி சாத்தியமாகும். இந்த நாடுகளில் இருந்து தேவையான பொருட்கள்வருவதற்கு வழி வகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மஷார்-ஏ-ஷெரீப் நகரின் விமானத் தளத்தை இனி அமெரிக்கப் படைகள்பயன்படுத்தி தலிபான்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தவும் முடியும்.
1980ளில் இந்த நகரம் சோவியக் கட்டுப்பாட்டில் இருந்தது. 1992ம் ஆண்டுமஷார்-ஏ-ஷெரீபை அப்துல் ரஷீத் தோஸ்தம் தலைமையிலான படை கைப்பற்றியது.1997ம் ஆண்டு இவரிடமிருந்து இந்த நகரை தலிபான் கைப்பற்றியது.
தற்போது மீணடும் தோஸ்தம் இந்த நகரை கைப்பற்றியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications