பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் அரசு பஸ் ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

தற்போது அரசு போக்குவரத்து ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் அரசியல் சட்டத்திற்குப்புறம்பானது.

முன்னறிவிப்பு ஏதும் இல்லாமலேயே அவர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருப்பதால், பொதுமக்கள் பெரிதும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே இந்தப் போராட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

இந்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள்தான் காரணம். எனவே இந்தச் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன் நாளை(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+