ஸ்தம்பிக்கிறது தமிழகம்
சென்னை:
பஸ், மின்துறை, ரேஷன் கடை, உணவுக் கழகம், பஞ்சாலைத் தொழிலாளர்கள் என அரசு ஊழியாளர்கள்அடுத்தடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
பஸ்கள் இல்லாததால் தீபாவளிக்கு உறவினர்கள் ஊருக்குச் செல்ல முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.குடும்பத்துடன் இருக்க நினைத்து 12, 13ம் தேதிகளில் ஊர்களுக்குச் செல்ல அரசு பஸ்களில் முன் பதிவுசெய்தவர்கள் ஏமாற்றத்துடன் அவரவர் ஊர்களிலேயே காத்துக் கிடக்கின்றனர்.
இது தவிர துணி எடுக்கவும் பலகாரம் செய்ய பொருள்கள் வாங்க என கிராமப் பகுதிகளில் இருந்து தீபாவளிக்குஇரண்டு நாட்களுக்கு முன்பு தான் பெரும்பான்மையான மக்கள் நகர்ப் பகுதிகளுக்கு வருவர்.
ஆனால், பஸ்கள் இல்லாததால் நகர்ப் பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர்.
இதனால் மக்களுக்கு அடுத்தபடியாத பெரும் அடி வாங்கியிருப்பது வியாபாரிகள் தான். துணி வியாபாரிகள் முதல்அப்பள வியாபாரி வரை தீபாவளி சேல்ஸ் நடக்காததால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழத்தின் பல்வேறு நகரங்களின் மார்க்கெட்டுகளில் கடந்த மூன்று நாட்களாக வெறும் காற்று மட்டுமே சுற்றிக்கொண்டிருக்கிறது.
தீபாவளி என்றால் சென்னை-தி.நகரில் உள்ள ரெங்கநாதன் தெருவில் எள் விழுவதற்குக் கூட இடமில்லாமல்மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும். ஆனால் கடந்த மூன்று நாட்களாக அங்கு வியாபாரிகள் மட்டுமேசுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தனர். மக்கள் கூட்டம் மிக மிகக் குறைவுதான்.
பஸ்கள் ஓடினால்தானே மக்கள் கூட்டம் வரும். ஆட்டோக்களில், வேன்களில் போனால் அவர்கள் கேட்கும்கட்டணத்திற்கு, தீபாவளி ஆசையே போய்விடும் என்பதால் மக்கள் ஷாப்பிங் போவதையே தவிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) மின்சார வாரிய ஊழியர்களும் ரேஷன் கடை ஊழியர்களும் கூட வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள அதே போனஸ் பிரச்சனைதான்இவர்களுக்கும்.
உணவுக் கழகம் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து ரேஷன் கடைகளுக்கு வர வேண்டிய தீபாவளிசிறப்பு சர்க்கரை, அரிசி, மண்ணெண்ணெய், சமையல் எண்ணெய் உட்பட பல உணவுப் பொருட்கள் வரத்தும்நின்றுவிட்டது.
இதனால், ரேஷன் கடைகளை நம்பியிருந்த ஏழைகளின் தீபாவளியும் புஸ்வானமாகிவிட்டது.
இந் நிலையில் சில இடங்களில் அரிசிப் பதுக்கலும் ஆரம்பித்துவிட்டது. இதனால், வெளி மார்க்கெட்டில்விலைவாசி அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இதெல்லாம் போகட்டும். தீபாவளியன்று வீட்டில் உட்கார்ந்து நிம்மதியாக டி.வியாவது பார்க்கலாம் என்றால்அதற்கும் "வேட்டு" வைக்கப் போகின்றனர் மின்சார வாரிய ஊழியர்கள்.
இன்று முதல் மின்சார வாரிய ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், மின் வினியோகத்திலும்பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications