பஸ் இல்லை: தீபாவளிக்கு பைக்குகளில் செல்லும் பெங்களூர் தமிழ் இளைஞர்கள்
பெங்களூர்:
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாலும், இருக்கும்பஸ்களில் கூட்டம் பயங்கரமாக இருப்பதாலும் சொந்த ஊர்களுக்கு பைக்குகளில் புறப்பட ஆரம்பித்துவிட்டனர்இளைஞர்கள் பலர்.
பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனங்களிலும் பிற அரசு, தனியார் நிறுவனங்களிலும் பெரும் எண்ணிக்கையிலானதமிழர்கள் பணி புரிந்து வருகின்றனர்.
தீபாவளிக்கு ஊர்களுக்குப் போக டிக்கெட் எல்லாம் புக் செய்து தயாராக இருந்த நிலையில் பஸ் ஸ்டிரைக்வந்துவிட்டது. இவர்களில் ஆம்னி பஸ்களில் ரிசர்வ் செய்தவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். அரசு பஸ்களில்செல்ல ரிசர்வ் செய்துள்ளவர்களின் பாடு பெரும்பாடாகிவிட்டது.
பெங்களூரிலிருந்து தமிழகத்துக்கு கர்நாடக அரசுப் பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையில் தான் இயக்குகிறது.ஸ்டிரைக் காரணமாக தமிழக பஸ்கள் ஒரு சில தான் பெங்களூருக்கு வந்து செல்கின்றன. அவற்றில் கூட்டம் மிகஅதிகமாக உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் தீபாவளியை எப்படியும் சொந்த ஊரில் கொண்டாடியேதீருவோம் என்ற முடிவில் பைக்குகளிலயே ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்ல ஆரமிபித்துள்ளனர்.
பையும், பைக்குமாக நேற்று (திங்கள்கிழமை) இரவிலிருந்தே பல இளைஞர்கள் கூட்டாக கிளம்பிச் செல்லஆரம்பித்துவிட்டனர். 5 அல்லது 6 பேராக சேர்ந்து பைக்குகளில் ஜாலியாக கிளம்பிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இவர்களில் பெரும்பான்மையானவர்கள் தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம் ஆகிய பகுதிகளைச்சேர்ந்தவர்கள். இந்த ஊர்களுக்கு அதிகபட்சம் 4 அல்லது 5 மணி நேரம் பயணம் செய்தால் போதும்.
இவர்கள் தவிர இன்னும் பல ஒரே ஊர்க்காரர்கள் டாடா சுமோ போன்ற கார்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டுசெல்கின்றனர். இதில் ஒவ்வொரு காரிலும் 8 முதல் 10 பேர் வரை பிக்னிக் செல்வது போல ஜாலியாகச்செல்கின்றனர்.
இன்னும் சிலர் டிக்கெட் ரிசர்வ் செய்வதற்கு அலையாய் அலைந்து நடயாய் நடந்தும் கிடைக்காமல் அலுத்துப்போய் தீபாவளிக்குப் போவதைக் கேன்சல் செய்துவிட்டும் உட்கார்ந்திருக்கிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications