மின் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்
சென்னை:
மின்சார வாரிய ஊழியர்கள் தங்களுடைய வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு, இன்று(செவ்வாய்க்கிழமை) காலை வேலைக்குத் திரும்பினர்.
இதுகுறித்து தமிழக மின் ஊழியர்கள் சங்கப் பொதுச் செயலாளர் எஸ். பஞ்சரத்தினம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மின்சார வாரிய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 90 சதவிகித ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர். இதுவே எங்களுக்கு ஒரு பெரிய வெற்றியாகும்.
இதிலிருந்தே அவர்கள் எந்த அளவுக்கு ஏமாற்றமும் கொந்தளிப்பும் அடைந்துள்ளனர் என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். இந்த அளவுக்கு நாங்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதை அரசு ஒரு எச்சரிக்கையாகஎடுத்துக் கொள்ள வேண்டும்.
நியாயத்தின் அடிப்படையில் எங்கள் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நல்ல முடிவை அரசு எடுக்க வேண்டும்.
தீபாவளி சமயத்தில் நாங்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்தால் பொதுமக்களுக்கு நிறைய பாதிப்பு ஏற்படும்.எனவே நாங்கள் வேலை நிறுத்தத்தை நிறுத்திக் கொள்வது என்று தீர்மானித்துள்ளோம்.
இந்த வேலை நிறுத்தம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து மின் ஊழியர்கள் அனைவரும் இன்று காலை தங்கள் வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டுபணிக்குத் திரும்பினார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications