"தாற்காலிகம் என்றாலே ஆபத்துதான்" - பஸ் விபத்து குறித்து இளங்கோவன் கருத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தாற்காலிகமாக அனுபவம் இல்லாத டிரைவர்களை வைத்து அரசுப் பேருந்துகளை இயக்கியதால் அனுபவமில்லாதடிரைவர்களை வைத்து வீம்புக்கு பஸ்களை இயக்கியதால் கோவில்பட்டியில் பஸ் விபத்துக்குள்ளானது என்றும்தாற்காலிகம் என்றாலே ஆபத்துதான் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.

இதுகுறித்து சென்னையில் இன்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

போக்குவரத்துத்துறை ஊழியர்களின் நியாமான கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்று அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய 20 சதவீத போனஸை வழங்கியிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் வீம்புக்காக பஸ்களை இயக்கியே தீருவோம் என்று அனுபவம் இல்லாத டிரைவர்களைவைத்து இயக்கியதால் கோவில்பட்டியில் பெரிய விபத்து ஏற்பட்டு 27 உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த விபத்துஅதிமுக அரசின் மீது ரத்தக் கரையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொதுமக்கள் நலனில் அதிமுக அரசுக்கு உள்ள அக்கறைக்கு இந்த விபத்து சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தாற்காலிக டிரைவர்களை வைத்து பேருந்துகளை இயக்கியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தற்காலிகம்என்றாலே ஆபத்துதான் என்பது இப்போது ஆட்சியாளர்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன் என்றுஇளங்கோவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தாற்காலிகம் என்றாலே ஆபத்து என்பதை பன்னீர்செல்வம் தான் ஒரு தாற்காலிக முதல்வர் என்று கூறியதைஇளங்கோவன் சுட்டிக் காட்டியதாகக் கூறப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கண்டனம்

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் சங்கரையா வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது,

அனுபவம் இல்லாத டிரைவர்கைளை வைத்து பேருந்துகளை இயக்கியதால், கோவில்பட்டியில் ஏற்பட்டுள்ளகோரவிபத்துக்கு அதிமுக அரசுதான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

மேலும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, உடனே அவர்களுக்கு 20 சதவீதபோனஸ் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

பொறுப்புகளை உணராத அரசு - சிதம்பரம்

அனுபவம் இல்லாத டிரைவர்களை வைத்து பேருந்துகளை இயக்கியதால் கோவில்பட்டியில் ஏற்பட்டுள்ளவிபத்தின் மூலம் தமிழக அரசு தனது பொறுப்புக்களை முழுமையாக உணரவில்லை என்று விளங்குகிறது.

மேலும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேதனையை தமிழக அரசு இன்னும் உணரவில்லை என்றும்தெரிகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக தங்களுக்கு வழங்கப்பட்ட 20 சதவீத போனஸ் தொகையை வழங்க வேண்டும் என்றுபோக்குவரத்து ஊழியர்கள் கேட்பது நியாமான கோரிக்கைதான்.

ஆனால் தமிழக அரசின் நிதிநிலைமை மோசமாக இருக்கிறது என்பதிலும் உண்மை இருக்ககலாம் என்றார்சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+