வெறுப்புக்கு ஆளான சென்னை சிட்டி பஸ்கள்: தனியார் பஸ்கள் மீது மக்கள் காதல்
சென்னை:
மாநகர அரசுப் போக்குவரத்துக் கழக டிரைவர்களும், கண்டக்டர்களும் சென்னை நகர மக்களின் அதிகபட்சவெறுப்புக்கு ஆளாகி விட்டனர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னை ஒரு காலத்தில் சிட்டி பஸ்களுக்கு மிகவும் பெயர் போனதாக இருந்தது.ஆனால் இன்று தமிழகத்திலேயே மோசமான பஸ் சர்வீஸ் என்ற பெயர் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்திற்குக் கிடைத்துள்ளது.
பஸ் ஸ்டிரைக் துவங்குவதற்கு முன்பு வரை பெற்றிருந்த அவப் பெயரை விட அதிகபட்ச அவப் பெயரை இப்போதுடிரைவர்களும், கண்டக்டர்களும் பெற்றுள்ளளனர். சென்னை மக்கள் அந்தளவுக்கு சிட்டி பஸ்களால் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் ஒரு டிக்கெட் கட்டணம் இருந்தால் சென்னையில் மட்டும் வித்தியாசமானடிக்கெட்டுகள் இருக்கும். சென்னை நகரில் மற்ற ஊர்களைப் போலவே குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 1.50 உண்டு.ஆனால் அது பெரும்பாலான பஸ்களில் இருக்காது. மாறாக ஒரு சில பஸ்கள் மட்டுமே சாதாரண வகைக்கட்டணத்தில் இயங்கும் பஸ்களாக இருக்கும்.
மற்றபடி, எல்.எஸ்.எஸ். கட்டணம், மஞ்சள் போர்டு பஸ், எக்ஸ்பிரஸ் பஸ்,சொகுசுப் பேருந்து என விதவிதமானபோர்டுகளை மாட்டிக் கொண்டு மக்களிடம் அடாவடியாக கட்டணத்தை வசூல் செய்து வருகிறது மாநகரபோக்குவரத்துக் கழகம்.
ஒரு பயணி, சைதாப்பேட்டையிலிருந்து பாரிமுனை சென்று திரும்ப வேண்டுமானால் கையில் குறைந்தது 10ரூபாயாவது இருக்க வேண்டும். எல்லா பிரிவு மக்களாலும் இப்படி செலவு செய்ய முடியுமா?.
இது பரவாயில்லை, சில ரூட்களில் ஸ்பெஷல் பஸ்கள் என்ற பெயரில் ரூ. 2, 3, 3.50 என ஒரே கட்டணப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பஸ்கள்தான் கொடுமையிலும் கொடுமையானவை. இவை எந்தவகையிலும் விசேஷமான பஸ்கள் இல்லை. எல்லா பஸ் ஸ்டாப்பிங்குகளிலும் இவை நின்று செல்லும், சாதாரணபஸ்களைப் போலவே இருக்கும். ஆனால் குறைந்தபட்சக் கட்டணமே ரூ. 2 தான்.
தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் கண்டக்டர்களுக்கு என்று சிட்டி பஸ்சில் தனி சீட் இருக்காது. கூட்டம் கட்டிஏறினாலும் கூட, பஸ்சுக்குள் பயணிகள் மத்தியில் நுழைந்து சென்று ஒவ்வொரு பயணியாக பார்த்து பார்த்துடிக்கெட் கொடுப்பார் கண்டக்டர்.
ஆனால், சென்னையில் மட்டும் தான் கண்டக்டர், கோடீஸ்வரன் சேர் மாதியான இருக்கையில் உட்கார்ந்துகொண்டுதான் டிக்கெட் கொடுப்பார்.
பஸ்சில் கூட்டமே இல்லாவிட்டாலும் கூட அவருக்குக் கவலையில்லை. வந்துதான் டிக்கெட்டைப் பெற வேண்டும்.சில நேரங்களில் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெவித்தாலும் கூட வேண்டா வெறுப்பாக வந்து டிக்கெட் கொடுப்பார்.அந்த கோபத்தை யாராவது அப்பாவி பயணி சிக்கினால் அவரிடம் வெளிப்படுத்துவார்.
கண்டக்டர் உட்கார்ந்து கொண்டே டிக்கெட் கொடுப்பதால் பல பயணிகள் டிக்கெட் எடுப்பதே கிடையாது. செக்கிங்வருவது போலத் தெரிந்தாலும் கூட ஓடும் பஸ்சில் இருந்து இறங்கிக் குதித்துத் தப்பி விடுகின்றனர்.வயதானவர்களாக இருந்தாலும் கூட வந்துதான் டிக்கெட் பெற வேண்டும் என்று சில நேரம் கண்டக்டர்கள்பிடிவாதம் பிடிக்கும்போது பயணிகளுக்கு பயங்கரமான அளவில் கோபம் வருகிறது.
ஆனால் அதை வெளிப்படுத்த டியாமல் மனதுக்குள் போட்டு புதைத்து விட்டு வேதனையுடன் போகின்றனர்.
அடுத்தது சில்லரைப் பிரச்சினை. 25 பைசா சில்லரை பாக்கியைத் தருவது பெரும்பாலும் சரியாக நடக்கிறதுஎன்றாலும் கூட அதைத் தவிர்ப்பதற்காக 2.75 டிக்கெட் கட்டணமாக இருந்தால் அவர்களாகவே நம்மிடம்கேட்காமல் 3.00க்கான டிக்கெட்டைத் தருவர். ஏன் இப்படி என்று கேட்டால் 25 பைசா சில்லரை இல்லை,எனவேதான் 3.00 டிக்கெட் கொடுத்தேன் என்பார் அடாவடியாக.
மேலும், இது எனக்கா கிடைக்கப் போகிறது, அரசுக்குத்தானே 25 பைசா போகிறது என்று விளக்கம் வேறு கூறுவார்.சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பஸ்களில் ஏறினால் இதை சாதாரணமாக பார்க்க முடியும். 1.75, 2.25 போன்றகட்டணங்கள் 2, 2.50 என்று ஆகி விடும். இதுவும் பயணிகளிடையே கடும் அதிருப்தியைக் கொடுத்துள்ளது.
2000க்கும் மேற்பட்ட பஸ்களை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வைத்துள்ளது. ஆனால் ஒரு பஸ் கூடஉருப்படியாக இல்லை. பழைய பஸ்கள் அனைத்தும் மிகக் கொடுமையாக உள்ளது. புதிய பஸ்கள் அனைத்தையும்எக்ஸ்பிரஸ் பஸ்கள் என மாற்றி விட்டார்கள். அதில் ஏறினால் குறைந்தபட்ச டிக்கட்டே 2.50, 3தான். எனவே அதில்சாதாரண பயணிகள் ஏறத் தயங்குகிறார்கள்.
மொத்தத்தில் சென்னை நகர சிட்டி பஸ்கள், சென்னை மக்களுக்கு ஏற்றதாகவே இல்லை. ஏதோ, நியூயார்க்,வாஷிங்டன் போன்ற நகரங்களில் ஓடுவது போல உள்ளன. இதனால் சென்னை பஸ்கள் மீது கடும் கோபத்தில்உள்ள மக்களுக்கு இப்போதைய ஸ்டிரைக் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், அப்பாடா இவர்கள் தொல்லை இல்லை, காசு செலவானால் கூட பரவாயில்லை, நிம்மதியாகப்போய்ச் சேரலாம் என்று நினைக்கும் அளவுக்கு தனியார் பேருந்துகள் மீது காதல் பிறந்து விட்டது. இனிமேல்நமக்கு அரசு பஸ்சே தேவையில்லை எனும் அளவுக்கு நிலைமை கை மீறிப் போய் விட்டது.
இந்த நிலை மாற, எதிர்காலத்தில் அரசு பஸ்கள் லாபத்துடன் இயங்க உடனடியாக, அவசரமாக அறுவைச் சிகிச்சைசெய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசும், போக்குவரத்துக் கழக நிர்வாகமும் உள்ளன. குறைகளை சரி செய்து,பயணிகளைத் திருப்தியாகவும், நிம்மதியாகவும் பஸ் பயணம் செய்ய முன்வர வைப்பது அரசின் கையிலும்கண்டக்டர்கள் டிரைவர்கள் கைகளிலும் தான் உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications