தமிழகத்தில் மழை, மின்னலுக்கு 5 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. வங்கக் கடலின் வடக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் வியாழக்கிழமை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழைக்கு மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.
கோவையில் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. திருப்பூர் அருகே மின்னல் தாக்கி ஒருவர்பலியானார். பூசாரிப்பாளையம் என்ற இடத்தில் சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் வாழை, மிளகு பயிர்கள் மழையினால் சேதமடைந்துள்ளன. சில உப்பளங்களில்தேக்கி வைக்கப்பட்டிருந்த உப்பும் சேதமடைந்தது.
அருமனை என்ற இடத்தில் மின்சார கம்பியை மிதித்த ஒருவர் இறந்தார். கரூர் தரங்கம்பேட்டை என்ற இடத்தில் வயலில் வேலைசெய்து கொண்டிருந்த பெண், மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த பெண், சாலையில் சென்றிருந்த ஒரு பெண் ஆக மொத்தம்3 பெண்கள் மின்னல் தாக்கி இறந்தனர்.
மழை இன்னும் ஒரு நாளைக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications