பஸ் ஸ்டிரைக்: தொடர்கிறது பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் பன்னீர் செல்வத்துடன் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்தி போனஸ் பேச்சுவார்த்தைதோல்வியடைந்து விட்டதால், போக்குவரத்து தொழிலாளர்களின் அடுத்த கட்ட போராட்டத்தை சமாளிக்க அரசுபல புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த 7 நாட்களாக 20 சதவீத போனஸ் கேட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.ஆனால் நிதிநிலை மோசமாக இருப்பதால் 8.33 சதவீத போனஸ் மட்டுமே தரமுடியும் என்று தமிழக அரசுகூறிவருகிறது.

இந்நிலையில் முதல்வர் பன்னீர் செல்வத்துடன் மீண்டும் நேற்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைநடத்தினர். தமிழக அரசு சார்பில் முதல்வர் பன்னீர் செல்வம் தலைமையில், நிதி அமைச்சர் பொன்னையன்,போக்குவரத்துத் துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன், தலைமைச் செயலாளர் சங்கர் ஆகியோர்கலந்துகொண்டனர்.

தொழிற்சங்கங்களின் சார்பாக சி.ஐ.டியு. பொதுச் செயலாளர் ரங்கராஜன், தொழிலாளர் முன்னேற்றச் சங்க பொதுச்செயலாளர் சண்முகம், ஐ.என்.டியு.சி தலைவர் காளன் மற்றும் பல அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களின்மத்தியக் குழுப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையின் போது தமிழக அரசின் நிதிநிலை மிகவும் மோசமாக இருப்பதால், 8.33 சதவீத போனஸைப்பெற்றுக் கொண்டு அனைத்து தொழிலாளர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஆனால் தற்போது அறிவித்துள்ள போனஸைக் கொடத்துவிட்டு, 20 சதவீதத்தில் எஞ்சிய 11.67 சதவீதத்தைபொங்கலின் போது கொடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அதற்குள்அரசின் நிதிநிலைமை சீராகி விடாது என்று முதல்வர் பன்னீர் செல்வம் கூறிவிட்டார்.

பிறகு மீண்டும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று இரவு 7.00 மணிக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் தலைமையில்மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

எனவே போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்துவிட்டனர்.

இந்தப் போராட்டங்களைச் சமாளிக்க தமிழக அரசு சார்பில் பல புதிய உஷார் நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் அரசுபிறப்பித்துள்ள சிறப்பு உத்தரவின் விவரம் வருமாறு:

அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட வேண்டும். அதிரடிப்படை போலீசார்தயார் நிலையில் இருக்க வேண்டும்.

டிப்போ கிளை மேலாளர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன், மாவட்ட போலீஸ் எஸ்.பிக்கள்தொடர்பு கொண்டு நிலைமைகளை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். பிரச்சனைகளுக்குத் தக்கவாறுசெயல்பட்டு, போலீஸ் உயர் அதிகாரிகள் அவற்றைத் தீர்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+