தீவிரவாதத்தை ஒடுக்க கடும் சட்டம் அவசியம்- வாஜ்பாய்
டெல்லி:
தீவிரவாதம் மற்றும் மதவாத சக்திகளை ஒடுக்க கடுமையான சட்டத்தின் அவசியத்தை இன்று தொடங்கியஅனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் வாஜ்பாய் விளக்கினார்.
தீவிரவாததத்திற்கு எதிராக நாம் எவ்வாறு கடும் போராட்டம் நடத்திவருகிறோம் என்பது அனைவருக்கும் தெரியும்.தீவிரவாதத்தை ஒடுக்குவது என்பது அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பாலும், நமது பாதுகாப்புப்படைகளின் உழைப்பாலும், எல்லாவற்றிற்கும் மேலாக நாம் வரையறுத்துள்ள சட்டங்களின் உதவியாலும் தான்முடியும்.
தீவிரவாதத்தை முற்றிலும் அழிக்க நம்மிடம் தற்போது "தடா" வைத் தவிர வேறு எந்தக் கடுமையான சட்டமும்இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் (போடோ)அவசியத்தை அனைவரும் உணர வேண்டும்.
சமீபத்தில் அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்து அனைத்து நாடுகளும், தீவிரவாதிகள்விஷயத்தில் எவ்வளவு கடுமையாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளன.
நமது தேசிய சட்டக்குழு தற்போதைய சூழ்நிலையில் தீவிரவாதத்தை ஒடுக்க மிகக்கடுமையான சட்டங்கள்உருவாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்பதுநமது பாதுகாப்புப் படையினர் பல ஆண்டுகளாக கோரி வரும் ஒன்றாகும்.
எனவே இந்தச் சட்டங்களை இயற்றி நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு உங்களுடைய (அனைத்து மாநிலமுதல்வர்களுடைய) கருத்தை இந்தக்கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு வாஜ்பாய் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications