சென்னை விமான நிலையப் பாதுகாப்பு பணியை ஏற்றது சி.ஐ.எஸ்.எப்.
சென்னை:
சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்புப் பணிகளை மத்திய தொழில் துறை பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்)இன்று முறைப்படி தொடங்கியது. 600 வீரர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி தீவிரவாதிகள் விமானங்களைக் கடத்தித் தாக்குதல் நடத்தியபிறகு, உலகம் முழுவதும் விமான நிலையங்களுக்குப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவிலும் பல முக்கிய விமான நிலையங்களுக்குப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காகமத்திய தொழிற்துறைப் பாதுகாப்புப் படையினர்(சி.ஐ.எஸ்.எப்.) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல சென்னை விமான நிலையத்திற்கும் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் சி.ஐ.எஸ்.எப். தனது பணியைத் துவங்கியது.
இதற்கான விழா சென்னை விமான நிலையத்தில் இன்று காலை நடைபெற்றது. விழாவில் சி.ஐ.எஸ்.எப். பின்இயக்குநர் பி.பி.நந்தா மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத் தலைவர் டி.வி. குப்தா உள்ளிட்ட பல உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது பி.பி.நந்தா பேசுகையில்,
இன்று முதல் சென்னை விமான நிலையம் சி.ஐ.எஸ்.எப்.பின் பாதுகாப்பில் வருகிறது. எங்கள் பிரிவிலிருந்து 600வீரர்கள் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையம் இந்தியாவில் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பின்கீழ் வரும் 24 வது விமான நிலையம் ஆகும்.
தற்போது சென்னை விமான நிலையப் பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையில் ஒரு பகுதியினர் திரும்ப அனுப்பப்படுவார்கள்.
சி.ஐ.எஸ்.எப். வீரர்களைத் தவிர தமிழக போலீசாரும் அடுத்த ஒரு மாதத்திற்கு பாதுகாப்புப் பணியில்ஈடுபடுவார்கள். அற்குப் பிறகு சி.ஐ.எஸ்.எப். அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டில்எடுத்துக் கொள்ளும்.
சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது பற்றி பத்திரிக்கைத் துறையினர் உள்பட அனைத்து முக்கியநிறுவனங்களும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பாதுகாப்பிற்காக நாங்கள் வகுக்கும் சில விதிகளைஅவர்கள் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
மேலும் விரைவில் சென்னை விமான நிலையத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். சி.ஐ.எஸ்.எப்பின்பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்து இடங்களிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருந்துள்ளது. இங்கும்அவ்வாறு இருக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
விழாவின் முடிவில் சென்னை விமான நிலைய வளாகத்தில் சி.ஐ.எஸ்.எப். பின் கொடி ஏற்றப்பட்டது. விழாவில்டி.வி.குப்தா, சென்னை விமான நிலைய இயக்குநர் சுதிர்மார், தமிழக ஏ.டி.ஜி.பி., நடராஜன் உள்ளிட்ட பல உயர்அதிகாரிகள் பேசினார்கள்.












Click it and Unblock the Notifications