சென்னை-பெங்களூர் ரயிலில் வெடிகுண்டு புரளி
சென்னை:
சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் வெடிகுண்டு வைக்கத் திட்டமிட்டுள்ளதாக வந்த மிரட்டலைஅடுத்து பெங்களூர் செல்லும் அனைத்து ரயில்களும் சோதனை செய்யப்பட்டன. முடிவில் இந்த மிரட்டல் வெறும்புரளி என்று தெரிய வந்தது.
இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த கடிதத்தில் எழுதப்பட்டிருப்பதாவது,
நான் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு துணிக்ககடையில் துணி எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போதுஎனக்கு அருகில் நின்று கொண்டிருந்த 2 பேர் மர்மமான முறையில் பேசிக் கொண்டிருந்தனர்.
சென்னையிலிருந்து 16ம் தேதி பெங்களூருக்குச் செல்லும் ரயிலில் வெடிகுண்டு வைக்கப் போவதாக அவர்கள்பேசிக்கொண்டனர். அரக்கோணத்தில் வைத்து வெடிகுண்டை வைக்கப் போவதாகவும் அவர்கள் பேசிக்கொண்டனர்.
எனவே முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்என்று அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் எழுதியவர் பெயர், விலாசம் எதுவும் அந்தக் கடித்தில்குறிப்பிடப்படவில்லை.
இருப்பினும் போலீசார் பெங்களூர் செல்லும் அனைத்து ரயில்களையும் அரக்கோணத்தில் வைத்து பெட்டிபெட்டியாகச் சோதனை செய்த பிறகே அனுப்பினர்.
சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை என்பதால், இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மர்மக் கடிதத்தை எழுதியவர் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications