இந்தியாவில் உலகின் உயரமான போர் விமானத் தளம்

Subscribe to Oneindia Tamil

லேஹ்:

உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள விமானத் தளத்தை இந்திய விமானப் படை பயன்படுத்தஆரம்பித்துள்ளது.

காஷ்மீரின் லேஹ் பகுதியில் இந்த விமானத் தளத்தை இந்தியா கட்டியது. ஆனால், மிக்-21, ஜாகுவார் போர்விமானங்களை இந்த உயரத்தில் இயக்க முடியவில்லை. இதனால், இந்தத் தளம் செயல்படாமல் இருந்து வந்தது.

இப்போது நவீன ரகத்தைச் சேர்ந்த மிக்-29 ரக போர் விமானங்களைக் கொண்டு இந்த விமானத் தளத்தைசெயல்படுத்த ஆரம்பித்துள்ளது இந்தியா.

இந்த விமானத் தளம் இயக்கப்படுவதால் இந்தியாவின் பாதுகாப்பு மேலும் பாதுகாப்பு கூடியுள்ளதுஎன்று மேற்குமண்டல விமானப் படை தளபதி வினோத் பாட்டியா கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

மிக்-21 மற்றும் ஜாக்குவார் ரக விமானங்களும் தொடர்ந்து லேஹ் விமானத் தளத்தில் பயன்படுத்தப்படும்.

ஆனால் மிக்-29 ரக போர் விமானங்களால் எந்த விதமான தடையுமின்றி லேஹ் விமானத் தளத்தில்தரையிறங்கவோ எளிதில் மேலெழும்பவோ முடியும். இதனால் இனி மிக்-29 ரக போர் விமானங்களையே இந்தவிமானத் தளத்திலிருந்து இயக்க இந்திய விமானப் படை முடிவு செய்துள்ளது.

1998லிருந்தே இத்தளத்தில் மிக்-29 ரக விமானங்கள் இருந்தாலும், இப்போதுதான் முழு அளவில் அவைதங்களுடைய திறமைகளைக் காட்டவுள்ளன.

இதையடுத்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பாதுகாப்பு கிடைத்துள்ளது. அண்டை நாடுகளிலிருந்து வரும்மிரட்டல்களுக்கு இந்த மிக்-29 ரக விமானங்கள் பெரும் சவாலாக இருக்கும்.

லேஹ் விமானத் தளத்திலிருந்து 445 கி.மீ. தொலைவில்தான் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளது. 660கி.மீ. தொலைவில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலும், 1080 கி.மீ. தொலைவில் கிர்கிஸ்தான் தலைநகர்அலாமட்டியும் உள்ளன.

மேலும் சீனாவுக்கு வெகு அருகில்தான் இந்த விமானத் தளம் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

லேஹ் விமானத் தளத்தில் நான்கு மிக்-29 ரக போர் விமானங்கள் செய்து காட்டிய சாகசங்களை வினோத்பாட்டியாவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசும், பல ராணுவ-விமானப் படை அதிகாரிகளும்பார்வையிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+