மூட்டை மூட்டையாக பான் மசாலா, குட்கா பறிமுதல்
சென்னை:
தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) முதல் பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலை ஆகியவை தடைசெய்யப்பட்டிருப்பதை அடுத்து, சென்னையில் இன்று ஆயிரக்கணக்கான பான் மசாலா, குட்கா பாக்கெட்டுகள்பறிமுதல் செய்யப்பட்டன.
இன்று காலையிலேயே தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் பறிமுதல் பணியைத் தொடங்கினர்.
சென்னை-பூந்தமல்லியில் 20க்கும் மேற்பட்ட கடைகளில் தொங்கவிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான பான்மசாலாப் பாக்கெட்டுகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் மூட்டை மூட்டையாக அள்ளிக்கொண்டு சென்றனர்.
இவற்றைத் தவிர மறைத்து வைக்கப்பட்ட பான் மசாலாப் பாக்கெட்டுகளையும் தீவிர சோதனைக்குப் பின்னர்பறிமுதல் செய்தனர் அதிகாரிகள்.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து சோதனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பான் பராக், மாணிக் சந்த் என்று பாக்கெட்-பாக்கெட்டாகத் தொங்கிக் கொண்டிருந்த கடைகள் அனைத்தும்இப்போது வெறுமையாகியுள்ளன.
இதனால் குட்டிக் குட்டிக் கடைக்காரர்கள் மட்டுமல்லாமல் பான் மசாலாவையே எப்போது பார்த்தாலும் சுவைத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications