வெள்ளை மாளிகையில் ரம்ஜான் விருந்து: அமெரிக்க தூதரும் நோன்பு
வாஷிங்டன்:
அமெரிக்காவில் முக்கிய முஸ்லீம் தலைவர்களுக்கு வெள்ளை மாளிகையில் ரம்ஜான் நோன்பு திறப்பு விருந்து(இப்தார் நிகழ்ச்சி) வழங்கினார் அதிபர் புஷ்.
இஸ்லாம் மதத்துக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாக பின்லேடன் கூறி வரும் நிலையில் அதைஉடைக்கும் முயற்சியாக இந்த விருந்துக்கு ஜார்ஜ் புஷ் ஏற்பாடு செய்திருந்தார்.
அவர்களிடையே பேசிய புஷ், தீவிரவாதத்துக்கு எதிரான உங்கள் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.விரைவில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமைதி கிடைக்கும். தீவிரவாதிகளுக்கு மதமே கிடையாது.கெட்டவர்களுக்கு புனித மாதமும் கிடையாது, புனித நாளும் கிடையாது என்றார்.
இந்த விருந்தின்போது, இமாம் அப்துல்லா முகம்மத் கெளஜ் சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார். இதில் ஜார்ஜ்புஷ்சும் கலந்து கொண்டு வணங்கினார்.
இந் நிகழ்ச்சியில், வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல், பாதுகாப்பு ஆலோசகர் காண்டலீஸ்ஸா ரைஸ்ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நோன்பு இருக்கும் அமெரிக்கத் தூதர்:
பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் வென்டி சேம்பர்லின் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரம்ஜான் நோன்பைதானும் மேற்கொண்டுள்ளார்.
நேற்று அமெரிக்கத் தூதரகத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்திய சேம்பர்லின் இதனைத் தெரிவித்தார்.ரம்ஜானின் புனித நோக்கம் தனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாகவும், இந்த மாதம் முழுவதும் நோன்பிருக்கமுடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ரம்ஜான் மாதத்திலும் ஆப்கானிஸ்தான் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்புக்கிளம்பியுள்ள நிலையில் சேம்பர்லின் நோன்பிருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சேம்பர்லின் கிருஸ்துவர்என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications