வீரப்பன் கேசட்டை முதல்வரிடம் கொடுத்தார் நெற்றிக்கண் மணி
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் அனுப்பியதாகக் கூறப்படும் கேசட்டை தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்திடம்நெற்றிக்கண் வாரஇதழ் ஆசிரியர் மணி இன்று ஒப்படைத்தார்.
சந்தன வீரப்பன் தனக்கு பொது மன்னிப்பு வழங்கினால் சரணடையத் தயார் என்றும், அதற்கு முன்பு காட்டிற்குள்உள்ள கர்நாடக மற்றும் தமிழக அதிரடிப்படையை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறி ஒரு ஆடியோ கேசட்அனுப்பியுள்ளான்.
அந்தக் கேசட் கடந்த 7ம் தேதி ரகசியமான முறையில் நெற்றிக்கண் வாரஇதழ் ஆசிரியர் ஏ.எஸ்.மணிக்குஅனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கடந்த சனிக்கிழமை அன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
ஆனால் தமிழக அரசும் கர்நாடக அரசும் காட்டில் உள்ள தங்களது அதிரடிப்படைகளை வாபஸ் பெற மறுத்துவிட்டன.
மேலும் வீரப்பன் சரணைடய விரும்பினால் ஏதாவது ஒரு காவல் நிலையத்திலோ அல்லது கோர்ட்டிலோசரணடையலாம் ஆனால் பொதுமன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்கூறிவிட்டார். கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் இதே கருத்தைத் தான் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் வீரப்பன் அந்தக் கேசட்டில் கேட்டுக்கொண்டுள்ளபடி, முதல்வரைச் சந்தித்து அந்தக் கேசட்டை இன்று(செவ்வாய்க்கிழமை) மணி ஒப்படைத்தார்.
பின்னர் வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம் மணி கூறுகையில், கேசட்டை பெற்றுக் கொண்ட முதல்வர்பன்னீர்செல்வம், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தானாக சரணடைய வீரப்பன் முன் வந்துள்ளான்.இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்தேன் என்றார்.
பின்னர் முதல்வர் பன்னீர் செல்வம் இதுகுறித்துக் கூறுகையில், கர்நாடக அரசுடன் கலந்து ஆலோசித்த பின்னர்கேசட் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications