ஜெயலலிதாவைக் காப்பாற்ற தன் மீதே செல்வகணபதி பழி?
சென்னை:
கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் கட்ட விதிவிலக்கு அளிக்கும் முடிவை முன்னாள் அமைச்சர்செல்வகணபதிதான் எடுத்தார் என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதில் எந்த சம்பந்தமும் இல்லைஎன்றும் செல்வகணபதியின் வக்கீல் வாதாடினார்.
கொடைக்காணலில் விதிமுறைகளை மீறி ஓட்டல் கட்டியதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்செல்வகணபதி உள்ளிட்ட பலர் மீது வழக்கில் தனிநீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில்அப்பீல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதி தினகர் விசாரித்து வருகிறார்.
விசாரணையின் ஆறாவது நாளான நேற்று (திங்கள்கிழமை) செல்வகணபதியின் வக்கீல் பாப்டே வாதாடினார்.அவர் தனது வாதத்தில் கூறியதாவது,
கட்டுமான விதிப்படி மலைப்பகுதியில் தரையிலிருந்து 7 மீட்டருக்கு மேல் கட்டம் இருக்கக் கூடாது. ஆனால்மாஸ்டர் பிளான்படி, தரைப்பகுதியில் இருந்து 10 மீட்டருக்கு மேல் கட்டம் இருக்கக் கூடாது என்றுகூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு விதிகளும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதால், சட்டசபையில் இதுகுறித்து திருத்தம்கொண்டுவரப்பட்டது.
மலைப்பகுதி கட்டுமான விதிப்படி, கட்டிடத்தின் உயரத்தை ஒவ்வொரு கட்டத்திலும் தரைப்பகுதியில் இருந்துகணக்கிட வேண்டும். மலையில் மேடு, பள்ளங்கள் என்று இருக்கும். அது சமமாக இருக்காது. எனவேதான் இந்தவிதியை தளர்த்தக் கோரி வலியுறுத்தப்பட்டது.
முன்னாள் செல்வ கணபதி பிறப்பித்த உத்தரவில் வேண்டுமானால் தவறு இருக்கலாம். ஆனால் ஹோட்டல் கட்டவிதிவிலக்கு அளிக்கும் முடிவை தானாகவே அவர் எடுத்தார். இந்த முடிவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்தலையீடு எதுவும் இல்லை.
மேலும் செல்வகணபதி பிறப்பித்த உத்தரவு பொதுநலன் நோக்கில் தான் உள்ளது. சாட்சிகளும் செல்வகணபதியின்முடிவு பொதுநலன் நோக்கில் இல்லை என்று கூறவில்லை. இந்நிலையில் தனிநீதிமன்ற நீதிபதி எப்படி இந்தமுடிவுக்கு வந்தார்?.
இவ்வாறு பாப்டே தனது வாதத்தில் கூறினார்.
இப்போது மக்களவையில் அதிமுக எம்.பியாக உள்ள செல்வகணபதி பழியைத் தன் மீதே போட்டுக் கொண்டு இந்தவழக்கிலிருந்து ஜெயலலிதாவைக் காக்க முயல்வதாக திமுகவினர் கூறுகின்றனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications